Wednesday 29 May 2013

உடலில் அணியும் கணினி…ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புரட்சி

ஐபோன், ஐபேட் போன்ற புதுமையான சாதனங்களை அறிமுகப்படுத்தி, உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம், இப்போது உலகின் அடுத்த புரட்சி சாதனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகள் கூட்டத்தில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், உடலில் அணியும் வகையிலான கணிணிகளே, அடுத்த மின்னணு சாதன புரட்சியாக இருக்கும் என குறிப்பிட்டார். இத்தகைய சாதனங்களை ஆப்பிள் நிறுவனமே வெளியிடும் என எதிர்பார்ப்பதாகவும் குக் தெரிவித்தார்

பார்வையாளர்களை பரவசப்படுத்தும் படகுப் போட்டி

பார்வையாளர்களை பிரமிக்கச் செய்யும் பாய்மர படகுப் போட்டியின் தேசிய அளவிலான பந்தயம் சென்னை துறைமுகம் கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது
.
மூன்றாவது தேசிய அளவிலான டுவெண்டி நையனர் பாய்மரப் படகுப் போட்டியில், தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் 24 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவை 12 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடவர் மகளிர் என்ற பாகுபாடு இந்தப் போட்டியில் இல்லை.
போட்டி பற்றிய குறிப்புகள்
ஆழமான கடலில் சுழன்றடிக்கும் காற்றின் மத்தியில் நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டி மற்ற பந்தயங்களைப் போல் நடைபெறாது. பந்தயத்தில் பங்கேற்கும் படகை விரைவாகச் செலுத்த மோட்டார் உள்ளிட்ட எந்த கருவிகளும் படகில் கிடையாது. காற்று வீசும் திசைக்கு ஏற்ப படகை இயக்கும் போது சில நேரங்களில் படகு கவிழும் அபாயமும் உள்ளது.

தமிழக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களின் நிலை

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்ற பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 16,549 சிறப்பு ஆசிரியர்களை நியமித்தது அரசு. தொகுப்பூதியமாக மாதத்திற்கு 5,000 ரூபாய் பெறும் இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோருகின்றனர். கடலூர் மாவட்டத்தில், பணி நியமனம் பெற்ற 690 சிறப்பு ஆசிரியர்களின் தற்போதைய நிலையையும், அவர்களது கோரிக்கைகளையும் பார்க்கலாம்.
சிறப்பு ஆசிரியர்கள் தவிப்பு:
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பணி நியமனம் பெற்ற சிறப்பு ஆசிரியர்கள், மாதத்திற்கு 12 அரை நாட்கள் வேலை செய்து, 5,000 ரூபாயை தொகுப்பூதியமாக பெறுகின்றனர். கடந்த ஏப்ரலில் மூன்று வாரங்கள் மட்டுமே வேலை நாட்கள் என்பதால் 3,750 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறைக் காலமான இந்த மே மாதத்திற்கு அதுவும் கிடையாது என்பதால் சிறப்பு ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

Monday 27 May 2013

தமிழ் ஆபிரஹாம் லிங்கன் கதை - true story of Abraham Lincoln- Tamil


ஆபிரஹாம் லிங்கன்

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும்  பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

Sunday 26 May 2013

உண்மையான இந்தியன்-real indian of the year 2010-tamilan

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

விவேகானந்தரின் பொன் மொழிகள்-most poplar vivekananda quotes tamil



"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"


"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

Friday 24 May 2013

நியூட்ரினோ என்கிற பேராபத்து -plan to beam neutrinos from Theni observatory





தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து!
தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.

who is prakash rao of Orissa -பிரகாஷ் ராவ்

இவரல்லவோ.... 'பாரத ரத்னா' பட்டத்துக்குத் தகுந்தவர்.....!

ஒடிசாவில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் டீக்கடைக்காரர்.....!

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம். இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி

Tuesday 21 May 2013

சவுதி அரேபியாவிலிருக்கும் இந்தியர்களுக்கு அவசர காலச் சான்றிதழ் வழங்கும் பணி


சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு அவசர காலச் சான்றிதழ் வழங்கும் பணியை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.
சவுதியிலிருந்து, 60,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ள நிலையில் இதன் முதல் கட்டமாக, 15,000 சான்றிதழ்களை மட்டும் சரிபார்த்து ஒப்புதல் தரும் பணியை இந்திய தூதரகம் மேற்கொள்கிறது.
அடுத்தகட்ட சரிபார்ப்புகள் குறித்த கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, நிதாகத் என்ற பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி,

Tuesday 14 May 2013

கல்லீரல் பற்றிய தகவல்

ஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்!


நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்?

 

கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக? முழுமையாக அறியாத ஒன்றை எவ்வாறு நேசிக்க இயலும்? என்பது போன்ற பதிலே பெரும்பாலும் பெறப்படும்.

 

Monday 13 May 2013

சில நோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் | Disease and symptoms and curing method


கண்கள் உப்பியிருந்தால்...

என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

Sunday 12 May 2013

தமிழர் வரலாறு கடலுக்கடியில் பூம்புகார்






இந்த அரிய தகவலை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ,
தமிழர் பெருமையை உலகம் அறிய செய்வோம் !!

கடலுக்கடியில் பூம்புகார்..

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும்அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பாமொகஞ்சதரோ நாகரிகங்களை விடப்பழமையானவை ஆகும்கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார்காம்பே நகரங்கள் பற்றிய 

Saturday 11 May 2013

richness about worlds oldest language Tamil -தமிழ் மொழி தொன்மை






கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

Friday 10 May 2013

gold usage in india-gold's own story


பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு!
கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்துள்ளது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார்.
ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார்.
இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.
இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை.
புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை

தாமஸ் ஆல்வா எடிசன் 100 முறை தோல்வி ஆனால் -true facts about Thomas Alva Edison

இந்த கட்டுரை...
பெற்றோர்கள் மற்றும் ,
ஆசிரியர்கள் மூலம் அவர்தம்
குழந்தைகளுக்கு சமர்ப்பணம் . .
. .

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வர்? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை, பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை... போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில் பிடிவாதம் செய்வர்.

மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்.

பொது அறிவு கேள்வி பதில்கள்-tamil general knowledge QA

சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:
 1.  ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
 திரு. சரண்சிங்.

 2.  உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
 ஜூன் 5.

 3.  மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
 உதடு.

 4.  ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
 கிட்டத்தட்ட 2.5  ஏக்கர்.

782 சிறப்பாசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 2013


அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி, ஓவியம், இசை மற்றும் தையல் சிறப்பாசிரியர்கள் 782 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 440 உடற்பயிற்சி சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓவிய ஆசிரியர்களில் 196 பணியிடங்களும், தையல் பிரிவுக்கு 137 பணியிடங்களும், இசை ஆசிரியர்கள் 9 பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday 9 May 2013

மெல்ல மெல்ல சரியும் ஐடி துறை... குறையும் பணிவாய்ப்பும் ஊதிய உயர்வும்..Shocking News about IT sector

10 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வரூபமாக பெருநகரங்களின் புறநகரங்களை கபளீகரம் செய்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு லட்சக்கணங்களில் ஊதியத்தை வாரிக் கொடுத்து வரப்பிரசாதமாக இருந்தன ஐடி நிறுவனங்கள்... காலச்சக்கரம் மெல்ல மெல்ல அதன் அத்தனை மகிழ்ச்சிகளையும் புரட்டி போடத் தொடங்கியிருக்கிறது.. ஐடி நிறுவன வாழ்க்கை.. கிரெடிட் கார்டு புழக்கம்.. எல்லாவற்றுக்கும் லோன்...

பிளஸ்டூ தேர்வு முடிவுகளை காண... | Want to see HSC Results in Tamilnadu 2013

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசின் இணையதளங்கள்...
CLICK HERE THE BELOW LINK




இதில் http://dge3.tn.nic.in என்ற இணைய தளம் GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பிளஸ்டூ தேர்வு முடிவுகள், plus two results, 2 exam results, plus two, students, pass, fail, state first, tamil, english, maths, biology, ரிசல்ட், மாணவர்கள், தேர்ச்சி, பாஸ், பெயில்

Tuesday 7 May 2013

ஸ்ரீரங்கம் தொகுதியில் காகித அட்டை தயாரிப்பு நிறுவனம் : முதலமைச்சர் ஜெயலலிதா

ஸ்ரீரங்கம் தொகுதியில் காகித அட்டை தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன்கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில், 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து லாபகரமாகவும், பல விருதுகளை பெற்றுள்ளதுமான தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனம் காகிதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலம் ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் டன் திறன் கொண்ட, இரு புறமும் மேற் பூச்சு செய்யப்பட்ட அடுக்கு காகித அட்டை, தயாரிக்கும் ஒரு புதிய ஆலை சுமார் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் நவீன இயந்திர வசதிகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை-மணப்பாறை மாநில