Wednesday 30 April 2014

ராணுவ அலுவலகத்தில் சுவிட்ச் போர்டு ஆப்ரேட்டர் பணி

ராணுவ படைப் பிரிவின்கீழ் காலியாக உள்ள குரூப் சி சிவிலியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: CSBO(Civilian Switch Board Operator) Grade-II, Group "C"
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.5,200 - 20,200 +தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Private Board Exchange (PBX)கையாளுவதில் திறமை பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம், இந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 04.05.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.05.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commanding Officer, South Western Command Composite Signal
Regiment, PIN-901152. C/O 56 APO.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் பணி

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேசில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், நர்சிங் விரிவுரையாளர் உள்ளிட்ட 296 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. பேராசிரியர் - 48
02. கூடுதல் பேராசிரியர் - 39
03. இணை பேராசிரியர் - 76
04. உதவி பேராசிரியர் - 90
05. உதவி பேராசிரியர்/ நர்சிங் விரிவுரையாளர் - 10
06. டியூட்டர்/ கிளினிக்கல் இன்ஸ்ட்ரக்டர் - 33
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500. (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.100).
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய 
www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2014

Tuesday 29 April 2014

சுங்கவரி அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

புனேயில் செயல்பட்டு வரும் மத்திய சுங்கவரித் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர் பணிக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள்: 19
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 05.05.2014 தேதியின்படி 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் ஒரு மணி நேரத்திற்கு 800 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசி தேதி: 05.05.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Additional Commissioner, Cadre Control Cell, Central Excise, Customs & Service Tax Pune Zone, ICE House, Opp. Wadia College, 41/A, Sasoon Road, Pune - 411001.



Monday 28 April 2014

இஸ்ரோவில் உதவியாளர் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள Scientific Assistant-A, Programme Assistant, Research Asst போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Social Research Officer-C - 01
02. Junior Producer - 01
03. Social Research Assistant - 03
04. Programme Assistant - 03
05. Technical Assistant - 01
06. Scientific Assistant-A - 05
07. Media Library Assistant-A - 01
08. Library Assistant-A - 01

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷநல் வங்கியில் காலியாக உள்ள Chief Security Officer பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief Security Officer (CSO)
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய ராணுவத்தில் Colonel தகுதிக்குரிய பணியிலிருந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது முப்படைகள் ஏதாவதொன்றில் Colonel பணிக்கு இணையக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 36.200 - 40,400
வயதுவம்பு: 01.01.2014 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் பணி அனுபவம், மருத்துவ தகுதி, கணினி இயக்கும் திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணத்தை Punjab National Bank, CSO, New Delhi என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.05.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  THE GENERAL MANAGER-HRD, Punjab National Bank, HO: HRDD, 7-BHIKHAIJI CAMA PLACE, NEW DELHI - 110066.

Sunday 27 April 2014

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் லேப்டெக்னீசியன் பணி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் காசநோய் ஆராய்ச்சி மையத்தில் லேப்டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Lab Technicians.
காலியிடம்: 06
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: Microbiology/Medical Laboratory Technology பாடங்களில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc Medical Lab Technology பட்டம் பெற்றவர்கள் DMLT முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Laboratory Technicians
காலியிடம்: 02
சம்பளம்: ரூ.18,000
கல்வித்தகுதி: Microbiology பாடத்தில்
B.Sc பட்டம் அல்லது B.Sc Medical Lab Technology படிப்புடன் DMLT படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிஇ பட்டதாரிகளுக்கு இந்திய ஏற்றுமதி கவுன்சிலில் அதிகாரி பணி

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏற்றுமதி ஆய்வு கவுன்சிலில் காலியாக உள்ள 23 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. உதவி இயக்குநர் (டெக்னிக்கல்) - 09
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயது வரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் துறையில் பி.இ/பி.டெக் அல்லது ஏதாவது ஒரு அறிவியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். மேலும் வேதியியல்/ உணவு அறிவியல்/ உணவு தொழில் நுட்பம்/ மீன்வளம்/ கால்நடை அறிவியல்/ கம்ப்யூட்டர்/ ஐடி ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 3 வருட இன்ஸ்பெக்ஷன் அல்லது டெஸ்டிங்கில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
02. டெக்னிக்கல் ஆபீசர் - 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பி.இ/பி.டெக் பட்டம் அல்லது அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி. முடித்திருக்க வேண்டும். மேலும் வேதியியல்/ உணவு அறிவியல்/ உணவு தொழில்நுட்பம்/ மீன்வளம்/ கால்நடை அறிவியல்/ கம்ப்யூட்டர்/ ஐடி துறையில் இன்ஸ்பெக்ஷன் மற்றும் டெஸ்டிங்கில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
03. ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

முன்னாள் இராணுவத்தினனருக்கு ரிசர்வ் வங்கியில் காவலர் பணி

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் ரிசர்வ் வங்கியின் கிளைகளில் Security Guard-ஆக பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னாள் இராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
பணி: Security Guard
காலியிடங்கள்: 11
சம்பளம்: ரூ.6,350 - 13,750
வயது: 01.01.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சம் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தகுதியுடன் 15 வருடம் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் பட்டதாரிகளாக கருதப்படுவர்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை தேர்வு முறையின் விரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2014

Saturday 26 April 2014

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (KVASU)காலியாக உள்ள 185 உதவியாளர் குரூப் IV பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 185
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01 உதவியாளர் -. 72
வயதுவரம்பு: 36-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
02 குரூப் IV பணிகள் - 113
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000

தொழிலாளர் அரசு காப்பீட்டு மாதிரி மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு மாதிரி மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள Specialist (Part time), Specialist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Super Specialist (Part time)
தகுதி: மருத்துவம் சார்ந்த துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையத்தளத்தைப் பார்க்கவும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Room No. 72, Committee Room of Medical Superintendent in ESI Model Hospital, ,Basaidarapur, New Delhi-15, India.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசு அச்சகத்தில் டெக்னீசியன் பணி

இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'Security Printing and Minting Corporation of India' நிறுவனத்தின் கீழ் ஆந்திரா, ஐதராபாத்தில் 'India Government Mint' என்ற நிறுவனங்களில் காலியாக உள்ள 32 டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Junior Technician (Die Medal Press Operator) - 02
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டை ஹீட் டிரிட்மென்ட் பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
02. Junior Technician (Fitter) - 06
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ. டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
03. Junior Technician (Mill Wright) - 05
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மில்ரைட் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
04. Junior Technician (Plumber) - 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
05. Junior Technician (Electrician) - 05
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
06. Junior Technician (Turner) - 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
07. Junior Technician (Machinist) - 02
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
08. Junior Technician (Carpenter)- 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ மமுடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
09. Junior Technician (Goldsmith)- 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நகை தொழிற்சாலையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்வதில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
10. Junior Technician (Motor Mechanic /Fork Lift Driver) - 02
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கார்/வேன் ஓட்டுவதில் 3 வருட பணி அனுபவம் மற்றும் மோட்டார் மெக்கானிசம் சம்மந்தமான அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.

Friday 25 April 2014

NTPC நிறுவனத்தில் நிதியியல் எக்சிகியூட்டிவ் பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC) பைனான்ஸ் எக்சிகியூட்டிவ் பணிப்பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Finance Executives - 32
கல்வித்தகுதி: CA அல்லது ICWA முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: (அ) E-3 பிரிவுக்கு அரசு, பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகள் எக்சிகியூட்டிவ் அந்தஸ்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.04.2014 தேதியின்படி 37-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.29,100 - 54,500

(ஆ) E-4 பிரிவுக்கு அரசு, பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் எட்டு ஆண்டுகள் எக்சிகியூட்டிவ் அந்தஸ்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.04.2014 தேதியின்படி 42-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.32,900 - 58,000

Thursday 24 April 2014

இந்திய ஏற்றுமதி கவுன்சிலில் பல்வேறு பணி

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Export Inspection Councilல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை Export Inspection Council of India, Delhi என்ற பெயருக்கு DD/Payorder- ஆக எடுத்து அனுப்ப வேண்டும். SC/ST/PH, பெண்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.elcindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதனை பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து அதனுடன் கல்வித்தகுதி, பணி அனுபவம், வயது, சாதி சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்று செய்து டிடி இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director, Export Inspection Council of India, 3rd Floor, NDYMCA Cultural Centre Building, 1 Jai Sing Road, New Delhi -110001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.elcindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Wednesday 23 April 2014

டிப்ளமோ/ பி.இ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "HLL Lifecare Limited" என்ற மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்தின் திருவனந்தபுரம் கிளையில் உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் முறை: www.lifecarehll.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசி தேதி:30.04.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DEPUTY GENERAL MANAGER (HR), HLL LIFECARE LIMITED, HLL BHAVAN, POOJAPPURA,TRIVANDRUM - 695012, KERALA.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lifecarehll.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Tuesday 22 April 2014

BECIL நிறுவனத்தில் பல்வேறு பணி

ஒலிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Broadcast Engineering Consultants India Limited (BECIL) சமீபத்தில் மானிட்டர், உதவியாளர், உள்ளடக்க கணக்காய்வாளர் பதிவுகள் காலியாக பதவிகளை நிரப்புவது அதன் அதிகாரப்பூர்வ போர்டல் விளம்பரம் posted. விருப்பமுள்ள வேட்பாளர்கள் , 28 ஏப்ரல் அல்லது முன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப வடிவமைப்பில் 2014 தங்கள் விண்ணப்ப அனுப்பலாம் . மேலும் விரிவான தகவல்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது .
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Content Auditor - 01
2. Senior Monitor - 03
3. Monitor - 42
4. Executive Assistant - 02
5. System Technician - 02
6. Logistic Assistant - 01

Monday 21 April 2014

கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி


கோல் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 339 மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி
காலியிடங்கள்: 339
கல்வித்தகுதி: என்விரான்மெண்டல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மார்கெட்டிங், பெர்ஸனல் மேனேஜ்மெண்ட், ஃபைனான்ஸ் மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் ஆகிய துறைகளில் ஏதாவதொன்றில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.coalindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

+2/ஐடிஐ/டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் காகித ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான காகித ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. I.Technician (ITI)
Fitter -28
Turner - 04
Mechanic (Motor Vehicle)
Electrician - 16
Instrument Mechanic - 10
Refrigeration & Air Conditioning Mechanic - 03
Mechinist - 02
Welder - 08

ECHS-ல் மருந்தாளுநர் பணி

Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் குறித்த விவரங்கள்:
Ranchi
Medical officer - 02
Lab Technician – 02
Physiotherapist – 01
Pharmacist - 01
Dental Hygienist - 01
Chowkidar – 01

Daltonganj
Lab Technician – 01
Pharmacist - 01
Dental Hygienist - 01
Chowkidar - 01

Chaibassa
Medical officer – 01
Pharmacist - 01
Nursing Assistant - 01
Dental Hygienist - 01
Chowkidar - 01

Saturday 19 April 2014

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி

தில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கல்வி மையங்களில் காலியாக உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிர்ப்ப தகுதியும், விருப்பமும் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
01. பேராசிரியர் - 12
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000.
02. இணை பேராசிரியர் - 26
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9000.
03. உதவி பேராசிரியர்: 29
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9000.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.jnu.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2014.

Friday 18 April 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு நறுமன பொருள் நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Spices Board நிறுவனத்தில் நடைபெறவுள்ள திட்டப்பணியில் டிரெய்னியாக தற்காலிகமாக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trainee
திட்டத்தின் பெயர்: Trainee to work for the Assignment with the Codex Alimentarious Commisison (CAC)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணியிடம்: கேரள மாநிலம் கொச்சி

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

தமிழகத்தின் திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு நடைறும் தேதி மற்றும் நேரம் விவரம்:
துறை: Physics
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.04.2014
நேரம்: காலை 9 மணி முதல்  11 மணி வரை
துறை: Mathematics
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Chemistry (Inorganic & Physical)
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 22.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: Media & Mass Communicaton
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: ENglish
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Education
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: Hindi
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Tamil & Sanskrit
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை

Thursday 17 April 2014

மத்திய அரசில் 875 மருத்துவர் பணி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒருங்கிணைந்த மெடிக்கல் சர்வீசஸ் தேர்வு மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 875 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. ரயில்வேயில் அசிஸ்டென்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபீசர் - 650
02. மத்திய சுகாதார சேவையில் ஜூனியர் நிலை அதிகாரிகள் - 150
03. ஜெனரல் டியூட்டி மெடிக்கல் ஆபீசர் (கிழக்கு, வடக்கு, தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன்) - 53
04. புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலில் ஜெனரல் டியூட்டி மெடிக்கல் ஆபீசர் - 22
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் இந்தி மொழி பெயர்ப்பாளர் பணி

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள ஜூனியர் மற்றும் சீனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்கள் ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. மத்திய அரசின் பிரதான மற்றும் துணை அலுவலகங்களில் ஜூனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர்.
கல்வித் தகுதி: ஆங்கிலம் அல்லது இந்தியில் முதுகலை பட்டம் மற்றும் பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது இந்தியை கட்டாயமாகவோ அல்லது தேர்வு செய்தோ படித்திருக்க வேண்டும் அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
02. மத்திய பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சீனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர்.

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்திய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காக்களில் அலுவலர் பணி

மத்திய தகவல் மற்றும் தொடர்பு துறை அமைச்சகம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காக்களில் காலியாக உள்ள டெக்னிக்கல் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாப் - இ - மிமிமி (சயின்டிஸ்ட்- 'டி') - 07
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டு முன் அனுபவம் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
02. மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாப் - இ -மிமி (சயின்டிஸ்ட் 'சி') - 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர், ஐடி, கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஐடி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Wednesday 16 April 2014

இந்திய அணுசக்தி துறையில் ஜூனியர் கொள்முதல் உதவியாளர் பணி

இந்திய அணுசக்தி துறையின்கீழ் செயல்பட்டு வரும் கொள்முதல் இயக்குநரகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஸ்டோர்கீப்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior purchase Assistant/Junior Storekeeper
காலியிடங்கள்: 60. மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். Materials Management துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: 21.04.2014 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Monday 14 April 2014

சிமெண்ட் கார்ப்பரேஷனில் ஜூனியர் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி



சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் மேனேஜ்மெண்ட் டிரெய்னி
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் போன்ற துறைகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cementcorporation.com என்ற இணையதளத்தைப பார்க்கவும்.

Saturday 12 April 2014

TCILல் உதவி மேலாளர் பணி

தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Telecommunications Consultants India Ltd (TCIL) (TCIL) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager(Secretarial & Legal)- 01
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
வயது வரம்பு: 01.04.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20600-46500

Friday 11 April 2014

பட்டதாரிகளுக்கு மத்திய போலீஸ் படைகளில் எஸ்.ஐ., ஏஎஸ்ஐ பணி

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினருக்கு பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு மூன்று  ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தில்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் பட்டப்படிப்புடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
திறந்தநிலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி முறையில் பெற்ற பட்டங்கள் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். என்சிசி 'பி' அல்லது 'சி' சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. அஞ்சலில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ரூ.100க்கான 'சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் பீ' ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இணையதளத்தில் இருந்து செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம்.
எஸ்சி., எஸ்டியினர், அனைத்துப் பிரிவை சேர்ந்த பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்திறன், உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு: இரு தாள்களை கொண்டது. முதல் தாள் 22.06.2014 அன்றும், இரண்டாம் தாள் 21.09.2014 அன்றும் நடைபெறும்.
தாள் - 1ல் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே தாள் - 2க்கு அனுமதிக்கப்படுவர்.
தபாலில் விண்ணப்பிப்பவர்கள் http://ssc.nic.in/SSC.html என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட இணையதளத்தில்ன் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
பகுதி-1 ஆன்லைன் படிவத்தை நிரப்ப கடைசி நாள்: 9.4.2014.
பகுதி-2 ஆன்லைன் படிவத்தை நிரப்ப கடைசி நாள்: 11.4.2014.
அஞ்சலில் விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Diretor(SR),
Staff Selection Commission,
EVK Sampath Building,
2nd Floor ,College Road,
Chennai 600 006.
அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC.html என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Thursday 10 April 2014

இந்திய திபெத்திய எல்லை போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணி

இந்திய திபெத்திய எல்லை போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணி

இந்திய உள்ளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய திபெத்திய எல்லை போலீஸ் படையில் 496 கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மென்) பணியிடங்களை விருப்பமும் தகுதியும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு: Indo-Tibetan Border Police Force
மொத்த காலியிடங்கள்: 496
பதவி: Constable (tradesman)
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு, ITI,டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
01. உயரம் தாண்டுதல்.
02. ஓட்டபந்தயம்
03. உடற்திறன் தேர்வு (PST)
04. துறைவாரியான தேர்வு
05. எழுத்து தேர்வு (OMR முறை)
06. தகுதிப்பட்டியல்
07. ஆவணங்களை பரிசோதித்தல் போன்ற முறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 5200 - 20,200 + த ஊதியம் ரூ.2,000.

Wednesday 9 April 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டிரெய்னி பணி

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி (Category-2)
காலியிடங்கள்: 543
வயதுவரம்பு: 22-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. SC/ST மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கல்வித்தகுதி: ஃபிட்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், கார்பென்டர், பிளம்பர், ரிக்கர், லேப் டெக்னீசியன், கெமிக்கல் பிளாண்ட் ஆபரேட்டர் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nfcrecruitment.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, ஊக்கத்தொகை போன்ற முழுமையான விவரங்களுக்கு http://www.npcil.nic.in,   www.nfcrecruitment.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஹெச்சிஎல் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் பணி

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (ஹெச்சிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 60 எக்சியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 60
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Dy. General Manager – 02
சம்பளம் ( E-7 ): 19500-450 - 25350
02. Assistant General Manager – 02
சம்பளம் ( E-6 ): 43200-3 % -66000
03. Chief Manager – 08
சம்பளம் (E-5 ): 36600-3 % - 62000
4. Senior Manager – 03
சம்பளம் (E-4 ): 29100-3 % - 54500
5. Manager – 02
சம்பளம் ( E-3 ): 24900-3 % - 50500
6. Deputy Manager – 16
சம்பளம் (E-2 ): 20600-3 % - 46500
7. Assistant Manager – 27
சம்பளம் ( E-1 ): 16400-3 % -40500
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750. SC/ST/PWD/பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.05.2014