Sunday 31 August 2014

கனரா வங்கியில் பட்டதாரி விளையாட்டு வீரர்களுக்கு எழுத்தர், அலுவலர் பணி

கனரா வங்கியில் பட்டதாரி விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கிளார்க் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கனரா வங்கி
காலியிடங்கள்: 22
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. விளையாட்டு: Cricket
காலியிடங்கள்: 10 (ஆண்கள்)

2. விளையாட்டு: Athletics
காலியிடங்கள்: 04 (ஆண்கள், பெண்கள்)

3. விளையாட்டு Shuttle Badminton
காலியிடங்கள்: 04 (ஆண்கள், பெண்கள்)

4. விளையாட்டு Table Tennis
காலியிடங்கள்: 04 (ஆண்கள், பெண்கள்)

கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
1 எழுத்தர் பணிக்கு ரூ. 7200 19,300
2 அதிகாரி பணிக்கு ரூ. 14,500 - 25,700
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 The Deputy General Manager,
Personnel Management Section,
Human Resources Wing, Canara Bank, 112,
J. C. Road, Bangalore - 580002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, விளையாட்டு தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.canarabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கிராம கல்விக் குழு கணக்காளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தாற்காலிக அடிப்படையில் கிராம கல்விக் குழு கணக்காளர்கள் பணியிடத்துக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
வட்டார வளமைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த பணியிடங்களில் 11 பேர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் ரூ.9,900 தொகுப்பூதியமாக அளிக்கப்படும்.
விண்ணப்பிப்போர் ஆகஸ்ட் முதல் தேதியன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பி.காம் கல்விச் சான்று, டாலி கணினி தகுதிச் சான்றுடன் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகிற செப்.1ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
தகுதியானவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்.13ஆம் தேதி நடைபெறும் என்றார் அவர்.

Saturday 30 August 2014

பிஐடிஎம் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பிர்லா இன்டரீயல் டெக்னாலஜிக்கல் மியூசியத்தில் (பிஐடிஎம்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீசியன்
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bitmcal.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: கொல்கத்தா சணல் மேம்பாட்டு இயக்குனரகத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 01.09.14 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் கிராமப் பொருளாதாரம், செடி வளர்ப்பு, மரபு வழி பண்பியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கொல்கத்தா விலங்குகள் பாதுகாப்புத் துறையில் தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர்
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக குன்னூரிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் முன்னுரிமை வகுப்பினரை சேர்ந்த பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக விண்ணப்பிப்போரின் வயது 32 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அடிப்படை கல்வித்தகுதியாக 10ம்வகுப்பு தேர்ச்சியும், தொழிற்நுட்ப கல்வித்தகுதியாக கம்மியர் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 இத்தகைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், குன்னூர்-1, நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு செப்டம்பர் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 0423-2231759 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னையின் தொற்றுநோய் மற்றும் காசநோய் பிரிவில் காலியாக உள்ள 36 இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: டெக்னிக்கல் அலுவலர் - ஏ
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: டெக்னீசியன் 'சி'
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

பணி: டெக்னீசியன் 'ஏ'
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

Friday 29 August 2014

பட்டதாரிகளுக்கு விவசாய ஆராய்ச்சி மையத்தில் நிர்வாக அதிகாரி பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விவசாய ஆர்ய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் நிதித்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officer
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Finance & Accounts Officer
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிதியியல், அக்கவுண்டிங், காமர்ஸ் துறையில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

டிப்ளமோ தகுதிக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணி

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: VSSC-284/11.08.2014

பணி:Technical Assistant (Post NO: 1242)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Post No:1243)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Post No: 1244)
காலியிடங்கள்: 02
சம்பளம்: 9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சிவில் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Post No: 1245)
காலியிடங்கள்: 01
சம்பளம்: 9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கெமிக்கல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant (Post No: 1246)
காலியிடங்கள்: 02
சம்பளம்: 9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் முதல் வகுப்பில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Thursday 28 August 2014

சித்திரா திருநாள் மருத்துவக் கல்வி ஆராய்த்தி மையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் சித்திரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப மையத்தில் General Apprentice பணிக்கு தகுதியான பட்டதாரிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
விளம்பர எண்: P&A II/32/GA/SCTIMST/2014
தேதி: 14.08.2014
பணி: General Apprentice
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செயய்ப்படும் நபர்கள் Front Office/OPD-யில் பணி அமர்த்தப்படுவர்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வரும் மாதம் ரூ.3,300 உதவித் தொகையுடன் பணி வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: IV-Floor, Achutha Menon Centre for Health Science Studies, Medical College Campus, Thiruvananthapuram, Ph:0471-2443152.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.08.2014 அன்று காலை 09 மணி முதல்
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரம் அடங்கிய பயோடேட்டா, கல்வித்தகுதி, வயது சான்றுகளின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sctimst.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிஇ பட்டத்தாரிகளுக்கு விண்வெளி ஆய்வு மையத்தில் சயின்டிஸ்ட் பணி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்ல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (Vssc) காலியாக உள்ள Scientist/Engineer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: VSSC-286
தேதி: 11.08.2014
பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1266
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், சிவில், ஏரோனட்டிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பி,இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1267
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கெமிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1268
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Metallurgy துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1269
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

Wednesday 27 August 2014

ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளர் பணி

Tata Institute of Fundamental Research (TIFR)ன் கீழ் பூனாவில் செயல்பட்டு வரும் National Centre for Radio Astro-physics-ல் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer-D (Electronics)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.இ, எம்.டெக் அல்லது பிஎச்.டி படிப்பினை Electronics,Communication, Instrumentation பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer-C (Electronics)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 1-2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 28க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 31க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://tinyuri.com/ncra8-14 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட மாதிரியில் விண்ணப்பம் தயார் செய்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer, NCRA-TIFR, Post Bag 3, Ganeshkhind, Pune University Campus, Pune-411007.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tinyuri.com/ncra8-14 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் CA பணி

முன்னனி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Economist, Chief Economist , Chartered Accountant & Chief Customer Service Officer பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஐஓபி
காலியிடங்கள்: 03
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Economist - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
2. Chief Economist - 01
வயதுவரம்பு: 45 - 62க்குள் இருக்க வேண்டும்.
3. Chartered Accountant - 01
வயதுவரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
1.Economist பணிகளுக்கு மாதம் ரூ.60,000.
2.Chief Economist பணிகளுக்கு மாதம் ரூ.75,000.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant General Manager,
Human Resources Development Department,
Indian Overseas Bank, Central Office,
No. 763, Anna Salai, Chennai- 600002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 06.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iob.in/uploads/CEDocuments/1.ENGLISH%20FINAL%20WEB%20ADVT.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

கடற்படையில் குருப் 'சி' பணி

அந்தமான் நிக்கோபார் தீவுகளை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கடற்படை யூனிட்களில் காலியாக உள்ள 95 குருப் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சிவிலியன் மோட்டார் டிரைவர்
காலியிடங்கள்: 69
சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1900.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: பயர் இன்ஜின் டிரைவர்:
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: பயர்மேன்
காலியிடங்கள்: 21
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

அரசு வங்கிகளில் கிளார்க் பணியில் சேருவதற்கான IBPS தேர்வு அறிவிப்பு

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேருவதற்கு Institute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வு என்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு வருடத்துக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்படும்.
CWE Clerks-IV தேர்வு பற்றிய அறிவிப்பை IBPS அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதவி: Clerical Cadre (CWE Clerks -IV)
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 18-28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினியில் அலுவலக பணிகளை செய்வதற்கான கோர்ஸ் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த மாநிலத்தில் பணியில் சேர விரும்புகிறாரோ அந்த மாநில மொழியில் எழுத, வாசிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழ்நாடு மாநில கோடு எண்: 41
புதுச்சேரி கோடு எண்: 37
தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி,வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நாகர்கோவில்
விண்ணப்பக் கட்டணம்: SC/ST மற்றும்  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.600. கட்டணத்தை செலுத்துவதற்கான செல்லான் படிவங்களை www.ibps.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து Bank of Baroda, Bank of India, Central Bank of India, Indian Overseas Bank, Punjab National Bank, United Bank of India, Bank of Maharashtra போன்ற 7 வங்கிகளில் ஏதாவதொரு வங்கியில் கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை Debit Card அல்லது Credit Card அல்லது Internet Banking மூலம் ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

Tuesday 26 August 2014

இராணுவ மருத்துவ துறையில் பல் மருத்துவர் பணி

இந்திய ராணுவ பல் மருத்துவ துறையில் காலியாக உள்ள பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Short Service Commissioned
(SSC) Officer
காலியிடங்கள்: 37
தகுதி: இறுதி வருடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் BDS/MDS முடித்திருக்க வேண்டும்.
31.08.2014 தேதியின்படி ஒரு வருட Intenship முடித்திருக்க வேண்டும்.
31.12.2014 தேதி வரையிலான Permanent Dental Registration சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ராணுவத்தில் சேவை புரிவதற்கான தகுந்த மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.12.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100+தர ஊதியம் ரூ.6,100 மற்றும் இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப்பின் பல் மருத்துவ படிப்பின் இறுதி வருட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ தகுதித்தேர்விற்கு உட்படுத்தப்படுவர். மருத்துவ தகுதித்தேர்வில் தகுதி பெறுபவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director General Armed Forces Medical Services, (DGAFMS/DENTAL-2), Room No.25, 'L' Block, Ministry of Defence, New Delhi-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டண விவரங்கள், பயணச் சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு பணி

மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பதிவாளர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், கிளார்க் போன்ற 29 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: துணை பதிவாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (எஸ்.ஜி-மிமி)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

TNPSC Group II 2014 Results Announcement

குரூப் 2 தேர்விற்கான முடிவுகளானது இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இதுகுறித்து இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "குரூப் 2" தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும். இதேபோன்று வி.ஏ.ஒ தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியாகும். குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இன்னும் 1 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு 162 இடம் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அக்டோபர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 21 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும், விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Group II 2014 Results Announcement , tnpsc Group II results , TNPSC DECLARE 2014 GROUP II RESULTS, tnpsc group 2 results,Tnpsc group 2 results will be announced within 15 days

Monday 25 August 2014

ராஜீவ்காந்தி பயோ டெக்னாலஜி மையத்தில் டெக்னிக்கல் அதிகாரி பணி

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் (Rajiv Gandhi Centre for Bio-Technology) வேதி உயிரியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள Technical Assistant, Technical Officer,Senior Research Fellow போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பணி: Technical Officer (Human Resources)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 39,100 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Technical Officer
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 39,100 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.18,00 + 20 சதவிகிதம் HRA
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற ழுமையான விவரங்கள் அறிய www.rgcb.res.in அல்லது www.sribs.kerala.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.08.2014

தமிழக அரசு மருத்துவனைகளில் மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் பணி

தமிழ்நாடு மருத்துவ சேவைப்பிரிவில் காலியாக உள்ள 2176 Assistant Surgeon பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர்  தேர்வு வாரியம் (MRB)வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு எண்: 05/2014
பணி: Assistant Surgeon (General) Code No: 001
காலியிடங்கள்: 2142
தகுதி: மருத்துவத்துறையில் இளங்கலை MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Surgeon (Dental), Code No: 002
காலியிடங்கள்: 34
தகுதி: Dental Surgery துறையில் இளங்கலை BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு தளர்வு: SC,SC(A), ST, MBC & DC, BC மற்றும் BCM பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகுதிகளை 10.08.2014க்குள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Sunday 24 August 2014

ராணுவ ஆராய்ச்சி & மேம்பாட்டு கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி & மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கும் Defence Scientific Information & Documentation Centre-ல் வழங்கப்பட உள்ள ஒரு வருட பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்படும் துறைகள்:
a.Degree in Library & Information Science
காலியிடங்கள்: 10
b.Diploma in Library Science (Two Years)
காலியிடங்கள்: 08
c.Degree in Computer Science (B.Tech. only)
காலியிடங்கள்: 22
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,560ம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2,530ம் வழங்கப்படும்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சமம்ந்தப்பட்ட துறையில் பட்டமும், பட்டயமும் பெற்றிருக்க வேண்டும். 2011க்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Director, Defence Scientific Information & Documentation Centre, Metcalfe House, New Delhi - 110054
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பயிற்சி திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

RMRCT ஜபல்பூரில் டேட்டா என்ட்ரி பணி

பழங்குடியின மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி பிரிவில் காலியாக உள்ள Field Investigator, Field Workers மற்றும் Data Entry Operators (DEO) பணியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 23,25,26 தேதிக
களில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Field Investigator (Supervisor)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.23,220
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 23.08.2014 அன்று காலை 10 மணி முதல் RMRCT, Jabalpur நடைபெறுகிறது.

பணி: Field Workers (Interviewers/ Surveyors/ Listers/ Mappers)
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.13, 760
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 25.08.2014 அன்று காலை 10 மணி முதல் RMRCT, Jabalpur நடைபெறுகிறது.

பணி: Data Entry Operators
காலியிடங்கள்: 03
சம்பளம்: 13,072
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 26.08.2014 அன்று காலை 10 மணி முதல் RMRCT, Jabalpur நடைபெறுகிறது.
  வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிக் கழக விதிகளின்படி SC/ST/OBC/PWDs பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rmrct.org/advertisment/advertisement_cover.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு BSNL நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: RET/28-79/2014/Vol.I
பணி: Junior Telecom Officers
காலியிடங்கள்: 04 (PWD (HI))
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 31.12.2014 தேதியின்படி Telecommunication, Electronics, Radio, Computer, Electrical, Information Technology, Instrumentation, INdustrial Electronics போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது அதற்கு இணையான பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 05.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டித் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அப்ரண்டீஸ் பணி

மத்திய அரசின்கீழ் தமிழகத்தின் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் நிரப்பப்பட உள்ள அப்ரண்டீஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அப்ரண்டீஸ்
கல்வித்தகுதி: எலக்டிரீசியன், மோட்டார் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக், ஃபிட்டர், பிளம்பர், கார்பெண்டர், டிராஃப்ட்ஸ்மேன் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 23க்குள் இருக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday 23 August 2014

ஐடிஐ தகுதிக்கு இந்திய கப்பல் கழகத்தில் பயிற்சியுடன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கப்பல் கழகத்தின் Fleet Personnel Department (Engineering)- Engine Room Petty Officers பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Engine Room Petty Officers(Fitter)
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கடல் பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.41,884

பணி: Trainee Engine Room Petty Officers (Tr.Fitter)
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
சம்பளம்: பயிற்சி காலத்தின்போது மாதம் ரூ.10,000 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
தகதி: இரு பணிகளுக்கும் தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பிட்டர் அல்லது டீசல் அல்லது மோட்டார் மெக்கானிக் துறைகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கப்பல் கட்டும் நிறுவனத்தின் கீழ் பிட்டர், டீசல், மோட்டார் மெக்கானிக் துறையில் 2 வருட டிரேடு அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும்

செளவுத் இந்தியன் வங்கியில் எழுத்தர் பணி

செளவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Probationary Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
பதவி: Probationary Clerk
கல்வித்தகுதி: கலை அல்லது அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பயன் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.12.2013 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது பிரிவினருக்கு ரூ.250.
2. SC/ST பிரிவினருக்கு ரூ.50. இதனை செளவுத் இந்தியன் வங்கியின் பெயரில் கொல்கத்தா மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy. General Manager, The South Indian Bank Ltd,
Regional Office- Kolkata, Door No.20 A,
Mother Teresa Sarani (Park Street),
1st Floor, Flat No.1, Kolkata- 700016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.southindianbank.com/UserFiles/file/website%20Sikkim.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.