Saturday 2 April 2016

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக 39 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 39
பணி: Technical assistant
பணி: Scientific assistant
தகுதி: டிப்ளமோ (எலக்ட்ரானிக்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ்) அல்லது, பிஎஸ்சி தோட்டக்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday 1 April 2016

நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தில் (EASTERN COALFIELDS LIMITED)  காலியாக உள்ள 400 மைனிங் சர்தார், சர்வேயர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 400
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: மைனிங் சர்தார் - 388
பணி: சர்வேயர் - 12
வயது வரம்பு: 01.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மைனிங் சர்தார், மைன் சர்வேயிங் மற்றும் ஓவர்மேன் பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.easterncoal.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.