Pages

Friday, 24 May 2013

who is prakash rao of Orissa -பிரகாஷ் ராவ்

இவரல்லவோ.... 'பாரத ரத்னா' பட்டத்துக்குத் தகுந்தவர்.....!

ஒடிசாவில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் டீக்கடைக்காரர்.....!

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம். இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி
ஒன்றை அமைத்துள்ளார். அதில் தற்போது 3ம் வகுப்பு வரை கல்வியளிக்கப்பட்டு வருகிறது. 3ம் வகுப்புக்கு மேல் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க, பிரகாஷ் உதவி செய்து வருகிறார். இப்பள்ளியில் சுமார் 60 ஏழை குழந்தைகள் படித்து வருகின்றன. குழந்தைகளுக்கு கல்வியளிக்க 4 டீச்சர்களை நியமித்துள்ள பிரகாஷ், அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தந்து வருகிறார். மேலும், சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு அவருக்கு ரூ. 20 ஆயிரம் செலவாகி வருகிறது. இவை அனைத்தையும் தனது டீக்கடையிலிருந்து மட்டுமே எடுத்து செலவிட்டு வருகிறார் பிரகாஷ். தனது பள்ளிக்காக இதுவரை யாரிடம் பணஉதவி அவர் கேட்டதில்லை.

இன்னும் மனிதம் செத்துவிடவில்லை.....! ஆங்காங்கே பிரகாஷ் ராவ் போல...... மிஞ்சி நிற்கிறது....! உங்களின் சேவைக்கு ஒரு ராயல் சல்யூட் ஐயா....!


No comments:

Post a Comment