Pages

Thursday, 2 October 2014

சாமூண்டிஸ்வரி மின்சார கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உதவி பொறியாளர், கணக்கு அலுவலர் பணி

சாமூண்டிஸ்வரி மின்சார கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  உதவி பொறியாளர் மற்றும் உதவி கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Asst. Engineer
காலியிடங்கள்: 
39
தகுதி: எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தகவல் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிவில் பொறியாளர் பணிக்கு சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் அல்லது AIME பிரிவில் A & B (சிவில்) முடித்திருக்க வேண்டும்.

பணி: Asst. Accounts Officer
காலியிடங்கள்:
 02
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  M.Com முடித்திருக்க வேண்டும் அல்லது ICWA/MBA(நிதி) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:  பொது பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.  SC/ST பிரிவினருக்கு 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கர்நாடக அரசு இட  ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் I, IIA,IIB, IIIA, IIIB பிரிவினருக்கு ரூ.4000. SC/ST பிரிவினருக்கு ரூ.2000.
சம்பளம்:  பொறியாளர் பணிக்கு மாதம் ரூ 18.380 - 32.610.  உதவி கணக்கு அலுவலர் பணிக்கு மாதம் ரூ 18.380 - 32.610.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cescmysore.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு http://www.cescmysore.org/sites/default/files/basic_files/EmploymentNotification.pdf என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment