Tuesday, 8 August 2017

குரூப் 2ஏ போட்டி தேர்வு கட் ஆஃப்



tnpsc group 2a cut off marks 6/08/2017,
tnpsc group 2a cut off marks 2018
tnpsc group 2a expected cut off marks 2018
tnpsc group 2a cut off 2018
tspsc group 2 cut off marks 2018 for bc
tnpsc group 2a total marks
tnpsc group 2a non interview result 2018
tnpsc group 2 cut off marks 2018
tnpsc group 2a expected cut off 2017

Saturday, 2 April 2016

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக 39 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 39
பணி: Technical assistant
பணி: Scientific assistant
தகுதி: டிப்ளமோ (எலக்ட்ரானிக்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ்) அல்லது, பிஎஸ்சி தோட்டக்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 1 April 2016

நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தில் (EASTERN COALFIELDS LIMITED)  காலியாக உள்ள 400 மைனிங் சர்தார், சர்வேயர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 400
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: மைனிங் சர்தார் - 388
பணி: சர்வேயர் - 12
வயது வரம்பு: 01.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மைனிங் சர்தார், மைன் சர்வேயிங் மற்றும் ஓவர்மேன் பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.easterncoal.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 30 March 2016

பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் பணி

இந்திய கடற்படையில் கோர்ஸ் கமென்சிங்-ஜனவரி 2017 பயிற்சியின் கீழ் பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் லாஜிஸ்டிக்ஸ் கேடர் பிரிவு மற்றும் எஜுகேசன் பிரிவில் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆண் - பெண் பட்டதாரி இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19½  -  25க்குள் இருக்க வேண்டும், கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சி., பி.காம், பி.எஸ்சி (ஐ.டி.) இளங்கலை படிப்புடன் நிதி, லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவில் முதுகலை டிப்ளமோ படித்தவர்கள், எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி. (ஐ.டி.) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி. இயற்பியல், கணிதவியல், வேதியியல், எம்சிஏ அல்லது பி.இ அல்லது பி.டெக், எம்.டெக். முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும், பெண்கள் 152 செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு நல்ல பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

Monday, 28 March 2016

வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கி (நபார்டு வங்கி )

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர்கள் (கிரேடு 'ஏ')
காலியிடங்கள்: 100
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: மேலாளர் (கிரேடு 'பி')
காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 25 - 35க்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC, PWD, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: விவசாயம், கால்நடை அறிவியல், கால்நடை கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் தொழில்நுட்பம், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ, ஏசிஎஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கு ரூ.650 + 100  = 750, கிரேடு 'பி' பணியிடங்களுக்கு ரூ.750 + 100 = ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.nabard.org/pdf/AM_RDBS_MANAGER_RDBS_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Friday, 25 March 2016

தேசிய உர ஆலையில் மேலாளர் பணி

தேசிய உரை ஆலையில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (HR)
காலியிடங்கள்: 03
பணி: Manager
காலியிடங்கள்: 02
பணி: Deputy Company Secretary
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் சம்ந்தப்பட்ட பிரிவுகளில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nationalfertilizer.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 23 March 2016

மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் செயல்பட்டு வரும் Central Marine Fisheries Research Institute -இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகின்றன.
பணி: Bosun - 01சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Mate Fishing Vessel தொழிற்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Skipper Grade-I - 01சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு  தேர்ச்சியுடன் Mate Fishing Vessel தொழிற்பிரிவில் சான்றிதழ் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (Motor Driver) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant (Programme Assistant-Computer) - 01சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant (Farm Manager) - 01சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agricultural, Horticulture பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணிப்பிக்கும் முறை: www.cmfri.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:26.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cmfri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.