தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
சம்பள விவரம்: மதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,800
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10+2+3/4/5 என்ற முறையில் பெற்ற இளங்கலைப் பட்டம் அல்லது 10+3+2 என்ற முறையில் பட்டயப்படிப்பு படித்த பின்னர் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2015.07.01 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள் மற்றும் நேர்முகத் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: ரூ.230. காவல்துறை விண்ணப்பதாரர்கள், பொதுப்பிரிவு மற்றும் துறைக்கான ஒதுக்கீடு இரண்டிலும் பங்குபெறும் விண்ணப்பித்தால் தேர்வுக் கட்டணமாக ரூ.460 செலுத்த வேண்டும். இதனை இணையதள வங்கி, வங்கி கடன் அட்டை, வங்கி பற்று அட்டைகள் மூலம் செலுத்தலாம். அல்லது அஞ்சலகம் - இந்தியன் வங்கிகள் மூலமும் செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு: பொது ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு 23.05.2015. காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு 24.05.2015 ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrbexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2015
மேலும் இட ஒதுக்கீடு, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnusrbexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.