Showing posts with label ESI Corporation. Show all posts
Showing posts with label ESI Corporation. Show all posts

Saturday, 7 February 2015

தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தில் செயற் பொறியாளர் பணி

இஎஸ்ஐசி என அழைக்கப்படும் தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 32  உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 32
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. செயற் பொறியாளர் - 12
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ. 6600.
2. உதவி செயற் பொறியாளர் - 08
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ. 5400.
3. உதவிப் பொறியாளர் - 12
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800 + தர ஊதியம் ரூ. 4600.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் அல்லது சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Sh. A.K Sinha,
Addl. Commissioner,
Hqrs. Office , ESI Corporation,
C.I.G Marg , New Delhi - 110002
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.