Showing posts with label திருச்சி ஆயுத தொழிற்சாலையில் பல்வேறு பணி. Show all posts
Showing posts with label திருச்சி ஆயுத தொழிற்சாலையில் பல்வேறு பணி. Show all posts

Tuesday, 6 May 2014

திருச்சி ஆயுத தொழிற்சாலையில் பல்வேறு பணி

பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் பீரங்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் (Heavy Alloy Penetrator) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெலிபோன் ஆபரேட்டர், ஃபயர்மேன், தர்வான் போன்ற நான்-இண்டஸ்ட்ரியல் பணிகள்.
காலியிடங்கள்: 12
கல்வித்தகுதி: டெலிபோன் ஆப்ரேட்டர் பணிக்கு +2 தேர்ச்சியுடன் பி.பி.எக்ஸ் இயக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஃபயர்மேன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்பு பயிற்ச்சியில் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
தர்வான் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை DD/IPO-வாக எடுத்து அனுப்ப வேண்டும். SC/ST/PH பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி:
The General Manager, Heavy Alloy Penetrator Project, Tiruchirapalli - 620025.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, எழுத்துத் தேர்வு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ofb.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.