ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் 137 பாதுகாப்பு முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: வாடிக்கையாளர் முகவர் அல்லது பாதுகாப்பு முகவர் (Customer Agent or Security Agent)
காலியிடங்கள்: 137
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணினி செயல்பாடுகள் குறித்த அறிவு மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடும் திறனும் மற்றும் உள்ளூர் மற்றும் ஹிந்தி மொழிகளின் அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கதாகும்.
வயதுவரம்பு: 01.03.2016 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,180
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் “Air India Air Transport Services Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Staff Housing Old Colony Ground, Kalina, Santa Cruz (E), Mumbai 400 029
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2016 அன்ரு காலை 8 மணி முதல் 11 மணி வரை
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.airindia.in/writereaddata/Portal/career/261_1_Advt-SA-BOM-March-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.