Showing posts with label Sports Person. Show all posts
Showing posts with label Sports Person. Show all posts

Wednesday, 10 September 2014

விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்கள்: தபால் துறை அறிவிப்பு

தபால் துறையில் காலியாக உள்ள பல்வேறுப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக தபால் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தபால் அலுவலகக் கோட்டங்கள், தபால் பிரிப்பகக் கோட்டங்கள், யூனிட்டுகள், இதர தபால் அலுவலகங்களில் உள்ள தபால் உதவியாளர், தபால் பிரிப்பக உதவியாளர், தபால்காரர், பல்வினைப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். தபால் அலுவலகக் கோட்டங்கள், தபால் பிரிப்பகக் கோட்டங்கள், யூனிட்டுகள், இதர தபால் அலுவலகங்களின் முழு விவரம், காலி இடங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தர ஊதியம், விண்ணப்பப் படிவங்கள் போன்ற விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ல்ர்ள்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் அதிலிலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை, பணியிடங்கள் காலியாக உள்ள சம்பந்தப்பட்ட தபால் கோட்ட அலுவலகத்திற்கோ, பிற தபால் சார் அலுவலகங்களுக்கோ மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 5 September 2014

வடகிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பளுதூக்கும் பிரிவு (ஆண்)- 02
ஹேண்ட் பால் (ஆண்) - 04
ஹேண்ட் பால் (பெண்) - 05
தடகளம் (ஆண்) - 01
தடகளம் (பெண்) - 02
வாலிபால் (ஆண்) - 02
எடைதூக்கும் பிரிவு (பெண்) - 02
நீச்சல் (ஆண்) - 04
கால்பந்து (ஆண்) - 03
கிரிகெட் (ஆண்) - 03
கோல்ஃப் (ஆண்) - 01
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 வகுப்பில் அறிவியல் பிரிவு அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100. இதனை சீனியர் பெர்சனல் ஆபிசர், ஆர்.ஆர்.சி., வடகிழக்கு ரயில்வே, கோரக்பூர் என்ற முகவரிக்கு மாற்றத்தக்க வகையில் இந்தியன் போஸ்டர் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும்.