அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி, ஓவியம், இசை மற்றும் தையல் சிறப்பாசிரியர்கள் 782 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 440 உடற்பயிற்சி சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓவிய ஆசிரியர்களில் 196 பணியிடங்களும், தையல் பிரிவுக்கு 137 பணியிடங்களும், இசை ஆசிரியர்கள் 9 பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
