Showing posts with label Apprentice Development Officers. Show all posts
Showing posts with label Apprentice Development Officers. Show all posts

Friday, 5 June 2015

எல்ஐசியில் 5066 எ.டி.ஒ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அனைவராலும் எல்ஐசி என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் (ADO'S) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும்.
மொத்த காலியிடங்கள்: 5066
பணி: Apprentice Development Officers
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. தெற்கு மண்டலம் (சென்னை) - 679
2. தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) - 699
3. மேற்கு மண்டலம் (மும்பை) - 918
4. வடக்கு மண்டலம் (புதுதில்லி) - 682
5. கிழக்கு மண்டலம் (கொல்கத்தா) - 597
6. கிழக்கு மத்திய மண்டலம் (பாட்னா) - 506
7. மத்திய மண்டலம் (போபால்) - 363
8. வடக்கு மத்திய மண்டலம் (கான்பூர்) - 622
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.26,736
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 + பரிவர்த்தனைக் கட்டணம்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50 + பரிவர்த்தனைக் கட்டணம்