உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பளுதூக்கும் பிரிவு (ஆண்)- 02
ஹேண்ட் பால் (ஆண்) - 04
ஹேண்ட் பால் (பெண்) - 05
தடகளம் (ஆண்) - 01
தடகளம் (பெண்) - 02
வாலிபால் (ஆண்) - 02
எடைதூக்கும் பிரிவு (பெண்) - 02
நீச்சல் (ஆண்) - 04
கால்பந்து (ஆண்) - 03
கிரிகெட் (ஆண்) - 03
கோல்ஃப் (ஆண்) - 01
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 வகுப்பில் அறிவியல் பிரிவு அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100. இதனை சீனியர் பெர்சனல் ஆபிசர், ஆர்.ஆர்.சி., வடகிழக்கு ரயில்வே, கோரக்பூர் என்ற முகவரிக்கு மாற்றத்தக்க வகையில் இந்தியன் போஸ்டர் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும்.