Showing posts with label Staff Nurse. Show all posts
Showing posts with label Staff Nurse. Show all posts

Tuesday, 18 November 2014

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி

இந்திய அரசின் சுகாராரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ், நாட்டின் பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் (All India Institute of Medical Sciences) ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 200 செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse, Grade - II
காலியிடங்கள்: 200
பணி ஒப்பந்த காலம்: 11 மாதங்கள்
சம்பளம்: மாதம் ரூ.27,000
வயதுவரம்பு: 20.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். எம்.எஸ்சி நர்சிங் முடித்திருப்பதுடன் கணினி குறிந்த தகவல்லைகள் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கான தேதி, இடம், நேரம் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.aiimsbhubaneswar.edu.in என்ற இணையதளத்தை தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.
நேர்முகத் தேர்விற்கு வருகைபுரியும் போது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை AIIMS BHUBANESWAR என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரியை விண்ணப்பத்தை கொண்டு ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:20.11.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Administrative Officer, All India Institute of Medical Sciences, Bhubaneswar, Sijua, Post: Dumuduma, Bhubaneswar - 751019.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsbhubaneswar.edu.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 11 September 2014

இந்திய சுகாதார ஆராய்ச்சி கவுன்சிலில் மருந்தாளுநர் மற்றும் செவிலியர் பணி

புதுதில்லியில் இந்திய சுகாதார ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ துறை சார்ந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: F2-6/HM/29/2014
பணி: Medical Officer (Specialist)
காலியிடங்கள்: 04
தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் சிறப்பு மருத்துவப் பிரிவில் முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் ஆயுர்வேதம், ஹோமியோபதி பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Assistant Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: BAMS/BHMS படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: Social Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: Health Education-ல் ஏதாவதொரு டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Health Supervisor
காலியிடங்கள்: 04
தகுதி: துணை மருத்துவ பிரிவில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Pharmacist
காலியிடங்கள்: 01
தகுதி: டி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Medical Worker
காலியிடங்கள்: 06
தகுதி: MSW அல்லது இணையான படிப்புடன் PMW பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Public health பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 08
தகுதி: Nursing பிரிவில் பி.எஸ் அல்லது Midwife training உடன் இணைந்த General nursing பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி: Lab Technician/Assistant
காலியிடங்கள்: 01
தகுதி: Medical Laboratory Technology பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.10,000