மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய அரசு, யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு துறை அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பணியிடங்களை நிரப்ப Staff Selection Commission நடத்தும் அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: Stenogrpher (Grade 'C & D') Examination -2014.
பணி: Stenogrpher (Grade 'C & D')
1. Stenogrpher Grade C பிரிவு பணியிடங்கள் தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளில் உள்ளன.
காலியிடங்கள்: 38
2. Stenogrpher (Grade D பிரிவு பணியிடங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ளன.
காலியிடங்கள்: 496
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 18 - 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 100/80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். தகுதிக்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.09.2014 அன்று காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் கோடு எண்: சென்னை: 8201, கோயம்புத்தூர்: 8202, மதுரை: 8204, திருச்சி: 8206, திருநெல்வேலி: 8207, புதுச்சேரி: 8401.
குறிப்பு: எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மதிப்பெண் குறைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு குறித்த விளக்கங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்