Showing posts with label Northwest railways. Show all posts
Showing posts with label Northwest railways. Show all posts

Friday, 10 July 2015

விளையாட்டு வீரர்களுக்கு வடமேற்கு ரயில்வேயில் குரூப் 'சி, டி' பணிகள்

வடமேற் ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான குரூப் சி மற்றும் டி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 54
வேலைவாய்ப்பு விளம்பர எண்: 01/2015 (NWR/ Sports/Open Advt.) தேதி: 20.06.2015
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1.  Archery - 02
2. Athletics - 10
3. Boxing - 03
4. Kabaddi - 02
5. Power Lifting - 04
6. Shooting - 01
7. Volley ball - 05
8. Wrestling - 04
தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பிளஸ் 2, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nwr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nwr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.