மத்திய போலீஸ் படைகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 5 பிரிவுகளைக் கொண்டு மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இந்தப் படை பிரிவின் தெற்கு பிரிவான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காலியாக பல்வேறு பணியிடங்களை பத்தாம் மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன்
மொத்த காலியிடங்கள்: 1085. இவற்றில் 100 இடங்கள் முன்னாள் இராணுவத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
பணி: பார்பர்
காலியிடங்கள்: 132
பணி: பூட் மேக்கர்
காலியிடங்கள்: 31
பணி: சமையலர்
காலியிடங்கள்: 401
பணி: கார்பென்டர்
காலியிடங்கள்: 21
பணி: எலக்ட்ரீசியன்
காலியிடங்கள்: 02
பணி: மோட்டார் பம்ப் அட்டென்டென்ட்
காலியிடங்கள்: 02
பணி: பெயின்டர்
காலியிடங்கள்: 86
பணி: ஸ்வீப்பர்
காலியிடங்கள்: 191
பணி: வாஷர்மேன்
காலியிடங்கள்: 173
பணி: வாட்டர் கேரியர்
காலியிடங்கள்: 29.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினருக்கு 05 வருடங்களும், ஒபிசியினருக்கு 03 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்களின் சேவைக்கேற்றபடி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பார்பர், பூட்மேக்கர், குக், கார்பென்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் பம்ப் அட்டென்டென்ட், பெயின்டர், வாஷர்மேன் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஸ்வீப்பர் மற்றும் வாட்டர் கேரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்: பொது, எஸ்சி/ ஒபிசியினருக்கான உயரம் : 170 செ.மீ., மார்பளவு: 80 - 85 செ.மீ., எஸ்டி பிரிவினருக்கு உயரம்: 162.5 செ.மீ., மார்பளவு: 76 - 81 செ.மீட்டரும், உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
கண் பார்வை திறன்: 6/6, 6/9 என்ற அளவில் கண்பார்வை திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவுகள் அளவிடுதல், உடல் திறன் தேர்வு, டிரேடு தேர்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை 'Assistant Commandant/DDO CISF, SZ HQR, Chennai' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DIG/CISF South Zone Hqrs,
DBlock, Rajaji Bhavan,
Beasant Nagar,
Chennai 600090.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in அல்லதுwww.cisfrecruitment.org என்ற இணையதளங்களை பார்க்கவும்.