Showing posts with label Perambalur. Show all posts
Showing posts with label Perambalur. Show all posts

Sunday, 10 January 2016

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் பணி

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் செயல்பட்டு வரும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் காலியாக கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பொறியாளர் (மின்சாரம்)  - 02 (நிரந்தரம்)தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரிக்கல் ஹெல்ப்பர் - 06 (பருவகாலம்)தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல், ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முத்து தொழிற்சாலையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: வெல்டர்-II - 01 (நிரந்தம்)தகுதி: 8- ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்து 5 ஆண்டுகள்  மற்றும்  வெல்டிங் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: லேப் கெமிஸ்ட் - 02 (பருவகாலம்)தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி,டெக் அல்லது எம்.எஸ்சி (வேதியியல்) அல்லது பி.எஸ்சி (வேதியியல்) முடித்து 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எழுத்தர்-IV - 07 (பருவகாலம்)தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எழுத்தர்-IV - 07 (நிரந்தரம்)தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சுருக்கெழுத்தர் - 01 (நிரந்தரம்)தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் (Higher கிரேடிலும், தமிழ் தட்டச்சில் Lower கிரேடிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Lower கிரேடில் சுருக்கெழுத்தும் முடித்திருக்க வேண்டும். பட்டம் படிப்பு முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 (OC-30, MBC-32, BC-32, SC-35, ST-35, SCA-35)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:12.01.2016 அன்று மாலை 5 மணிக்குள்