Showing posts with label Air India Limited. Show all posts
Showing posts with label Air India Limited. Show all posts

Saturday, 19 March 2016

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் 137 பாதுகாப்பு முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: வாடிக்கையாளர் முகவர் அல்லது பாதுகாப்பு முகவர் (Customer Agent or Security Agent)
காலியிடங்கள்: 137
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணினி செயல்பாடுகள் குறித்த அறிவு மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடும் திறனும் மற்றும் உள்ளூர் மற்றும் ஹிந்தி மொழிகளின் அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கதாகும்.
வயதுவரம்பு: 01.03.2016 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,180
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் “Air India Air Transport Services Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Staff Housing Old Colony Ground, Kalina, Santa Cruz (E), Mumbai 400 029 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2016 அன்ரு காலை 8 மணி முதல் 11 மணி வரை
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.airindia.in/writereaddata/Portal/career/261_1_Advt-SA-BOM-March-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tuesday, 16 June 2015

பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர்இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் விமானப் பணியாளர் பணியில் சேர திருமணமாகாத இந்திய இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன்பின்பு 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அதன் பின்னர் காலியிடங்கள் ஏற்படுவதை பொறுத்து மீண்டும் பணியில் அமர்த்தப்படலாம்.
பணி: Cabin Crew
பிராந்தியம் வாரியான காலியிடங்கள் விவரம்:
வடக்கு பிராந்தியம் (தில்லி) - 35
கிழக்கு பிராந்தியம் (கொல்கத்தா) - 09
தென் பிராந்தியம் (பெங்களூர்) - 13, ஹைதராபாத் - 13
மேற்கு பிராந்தியம் (மும்பை) - 13
மொத்த காலியிடங்களில் ஆண்களுக்கு 50 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 18.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யை நேர்முகத் தேர்வின்போ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 7 April 2015

+2, டிப்ளமோ தகுதிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் பயிற்சி விமான பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
காலியிடங்கள்: 435
பணி: Trainee Cabin Crew
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 10.04.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
மொழித்திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் அந்தந்த பிராந்திய தலைமையகம் அமைந்துள்ள நகங்களில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற விண்ணப்பதார்ரகளின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய  www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 11 December 2014

ஏர் இந்தியா - சென்னை அலுவலகத்தில் ரேடியோ டெலிபோன் ஆப்ரேட்டர் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ரேடியோ டெலிபோன் ஆப்ரேட்டர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Radio Telephony Operator
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியுடன் ரேடியோ டெலிபோன் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். Flight Dispatcher லைசென்ஸ் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.
வயதுவரம்பு: 01.12.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்
பணிக்காலம்: ஒரு வருடம்
சம்பளம்: மாதம் ரூ.16,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Air India Limited என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்(சுயசான்று செய்யப்பட்டிருக்க) இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.12.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager-Personnel, Southern Region, Air India Limited, Airline House, Meenambakkam, Chennai-600027.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்க வேண்டும்.