தமிழ்நாடு திரைப்படப்பிரிவில் காலியாக உள்ள வீடியோ ஒளிப்பதிவாளர் பணியிடம் மற்றும் மேதமிகு ஆளுநர் மாளிகையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையால் புதியதாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவாளர் பணி என 135 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman)
காலியிடங்கள்: 135
பணி இடம்: சென்னை
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,500
தகுதி: ஒளிப்பதிவு அல்லது ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் தமிழ்நாடு தொழிலிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட திரைப்பட தொழிநுட்ப பட்டயம் அல்லது பூனாவில் அமைந்துள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் ஆவணப் பட தயாரிப்பு அல்லது செய்தி ஆவணப்படம் தொலைக்காட்சிப் படம் மற்றும் விளம்பரப்படங்கள் தயாரிக்கும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் ஒளிப்படத் தொகுப்பில் ஒளிப்பதிவு கருவியை கையாள்வதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பு இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600009
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்கள் அறிய http://tndipr.gov.in/index.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.