இந்திய கடற்படையில் கோர்ஸ்
கமென்சிங்-ஜனவரி 2017 பயிற்சியின் கீழ் பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும்
லாஜிஸ்டிக்ஸ் கேடர் பிரிவு மற்றும் எஜுகேசன் பிரிவில் தகுதியானவர்களை
தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆண் - பெண்
பட்டதாரி இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின்பு அதிகாரியாக
பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு
விண்ணப்பிப்பவர்கள் 19½ - 25க்குள் இருக்க வேண்டும், கல்வி பிரிவுக்கு
விண்ணப்பிப்பவர்கள் 21 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: லாஜிஸ்டிக்ஸ்
பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ
அல்லது முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சி., பி.காம், பி.எஸ்சி (ஐ.டி.)
இளங்கலை படிப்புடன் நிதி, லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட்,
மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவில் முதுகலை டிப்ளமோ படித்தவர்கள்,
எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி. (ஐ.டி.) முடித்தவர்கள் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி.
இயற்பியல், கணிதவியல், வேதியியல், எம்சிஏ அல்லது பி.இ அல்லது பி.டெக்,
எம்.டெக். முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 157
செ.மீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும், பெண்கள் 152
செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு நல்ல
பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: பட்டப்படிப்பில்
பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் ஆட்சேர்க்கைக்கு
அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு நிலை1, நிலை2 ஆகிய இரு நிலைகளில்
தேர்வுகள் நடத்தப்படும்.
இரு நிலைகளிலும் நுண்ணறிவுத்திறன், படங்களை புரிந்து
கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழு விவதாதம், நேர்முகத்
தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு
உட்படுத்தப்படுவார்கள். அனைத்து தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள்
அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு தரவரிசையின்படி முன்னிலை
பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்ட கால
பயிற்சிக்குப் பின் சப்–லெப்டினன்ட் அதிகாரியாக பணி நியமனம்
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில்
விண்ணப்பித்த பிறகு அதனை இரண்டு கணினி பிரிண்ட் அவுட் எடுத்து ஒரு பிரிண்ட்
அவுட்டுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க
வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No.04, main Post Office. RK Puram. New Delhi 110066
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Document translation services
ReplyDelete