மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் செயல்பட்டு வரும் கெயில் நிறுவனங்களில் காலியாக உள்ள போர்மேன் (குருப் சி) பணியிடங்கள் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: போர்மேன் (குருப் சி)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. போர்மென் (மெக்கானிக்கல்) - 09
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், புரொடக்சன், புரொடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், உற்பத்தி, மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
02. போர்மென் (எலக்ட்ரிக்கல்) - 07
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
03. போர்மென் (இன்ஸ்ட்ருமென்டேசன்) - 07
கல்வித்தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.