இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 567 பணியிடங்களை நிரப்ப 21 ரெக்ருட்மென்ட் போர்டுகள் மூலம் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்) மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அனைத்து ரயில்வே தேர்வு வாரியங்களும் ஒரே நாளில் எழுத்துத்தேர்வு நடத்த உள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு ஆர்ஆர்பிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளிலும், பிராந்திய மொழிகளிலும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
சென்னை ஆர்ஆர்பியில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், பெங்களூர் ஆர்ஆர்பியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, கொங்கணி ஆகிய மொழிகளிலும், திருவனந்தபுரம் ஆர்ஆர்பியில் மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம்.
சென்னை ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்:
காலியிடங்கள்: 1666. (பொது- 782, எஸ்சி- 347, எஸ்டி- 275, ஒபிசி- 262,) இவற்றில் 160 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்: