Thursday, 16 April 2015

பாரத ஸ்டேட் வங்கியில் 2393 அதிகாரி பணி

அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 2393 Probationary officer (PO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/PO/2015-16/02
நிறுவனம்: State bank of India (SBI)
மொத்த காலியிடங்கள்: 2000 + 393
பணி: Probationary officer (PO)
பிரிவு வாரியான காலியிடங்கள் விரம்:
SC – 308
ST – 339
OBC – 541
GEN – 812
Backlog Vacancies:
SC – 67
ST – 219
OBC – 107
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 01.09.2015 தேதிக்கு முன்பு  தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1985 முதல் 01.04.1994க்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோயமுத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலும், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2015
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:02.05.2015
மேலும் சம்பளம், தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/portal/documents/44978/7348676/SBIPO-2015-Full+English+Advertisement.pdf/fa1e559b-0504-4df6-9d11-534790f1dd95 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 15 April 2015

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி & பொறியாளர் பணி

இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் ஹைதராபாத் பாலாநகரில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் National Remote Sensing Centre-ல் காலியாக உள்ள விஞ்ஞானி மற்றும் பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: NRSC.RMT/2015
தேதி: 28.03.2015
பணி: Scientist/Engineer 'SD'
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: Oceanography(Physical) Physics/Geophysics/Ocean Atmospheric Science & Technology-ல் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் முடித்து Oceanography-ல் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer 'SD'
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: Physics, Atmospheric Science, Climate Science-ல் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் முடித்து Atmospheric Chemistry-ல் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Library Assistant-A
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 35, ஓபிசி பிரிவினருக்கு 38, எஸ்சி பிரிவினருக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: முதல் வகுப்பில் நூலக அறிவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nrsc.gov.in/pdf/CA_2015_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

Tuesday, 14 April 2015

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட கிளார்க் பணி

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள  Law Clerks  பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்
பணி: Law Clerks
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று இந்திய பார் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,500 - 25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar General, High Court, Madras-600 104
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/lawclerknotf2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 13 April 2015

தூத்துக்குடி துறைமுகத்தில் உதவி மேலாளர் பணி

தமிழ்நாடு, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள உதவிமேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Estate Manager Grade-I
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Architecture/Town and Country Planning பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Chief Manager, V.O.Chidamparanar Port Trust, Tuticorin - 628004.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vocpt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 11 April 2015

தில்லி கமலா நேரு கல்லூரியில் 36 உதவி பேராசிரியர் பணி

தில்லி கமலா நேரு கல்லூரியில் காலியாக உள்ள 36 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். I/Teaching/2015
தேதி: 17/03/2015
பணி: உதவி பேராசிரியர்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Maths – 03
2. Commerce – 06
3. Hindi – 04
4. Economics – 05
5. English – 05
6. Pol.Science – 04
7. Sociology – 02
8. Environmental Studies – 02
9. Journalism – 01
10. Geography – 01
11. History – 01
12. Philosophy – 01
13. Psychology – 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்று NET/ SLET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: ww.knc.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Principal, Kamala Nehru College, August Kranti Marg, New Delhi 110049
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.knc.edu.in/wp-content/uploads/2013/06/Final-Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 10 April 2015

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் 1582 குரூப் "டி" பணி

கர்நாடகா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் நிரப்பப்பட உள்ள 1582 குரூப் "டி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Department of Health & Family Welfare, Karnataka
காலியிடங்கள்: 1582
பணி: குரூப் "டி"
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,600 - 14,550
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 30.04.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.karhfw.gov.in/drc.aspx என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2015
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.05.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.karhfw.gov.in/PDF/Instructions%20to%20the%20candidates%20%20for%20the%20post%20of%20Group%20D%20-1582.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 9 April 2015

மத்திய சேமிப்பு கிட்டங்கி கழகத்தில் 21 உதவியாளர் பணி

மினி ரத்னா பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய சேமிப்பு கிட்டங்கி கழகத்தின் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் உ.பி, சண்டிகாரில் காலியாக உள்ள 21 உதவியாளர் கிரேடு -II பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Warehouse Assistant Grade-II
காலியிடங்கள்: 12
பொது - 10
எஸ்சி - 05
ஓபிசி - 05
மாற்றுத்திறனாளிகள் - 01
சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டபின் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. இதனை Chandigarh-ல் மாற்றத்தக்க வகையில் Regional Manager, Central Warehousing Corporation, RO,  பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
விண்ணப்ப கவரின் மீது “APPLICATION FOR THE POST OF WAG-II IN CWC CHANDIGARH REGION” என்று எழுதியிருக்க வேண்டும்.
RegionalManager,
Central Warehousing Corporation,
Bay 39-42, Sector 31-A, Chandigarh.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.04.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/test_adv_wag_II_chd_090315.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.