Monday, 4 May 2015

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 76 டிரெய்னி & மேலாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல், மருத்துவம் மேலாண்மை பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. D.G.M
காலியிடங்கள்: 02
2. Assistant G.M 
காலியிடங்கள்: 03
3. Chief Manager
காலியிடங்கள்: 01
4. Sr.Manager
காலியிடங்கள்: 03
5. Manager
காலியிடங்கள்: 04
6. Dy.Manager
காலியிடங்கள்: 24
7. Assistant Manager
காலியிடங்கள்: 39
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.350. இதனை கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் Hindustan Copper Limited  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணிவாரியான தகுதிகள், அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustancopper.com/PDF/HCL_Exe_Rec_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 3 May 2015

தேசிய வைராலஜி நிறுவனத்தில் ஆய்வகநுட்பவியலாளர் சி பணி

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  3 ஆய்வகநுட்பவியலாளர் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician-C (Laboratory)
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் +2 முடித்து 2 வருட டிப்ளோமா பாடங்களுடன் + 2 மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பம் [DMLT] அல்லது  1 வருட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப [DMLT] படிப்புடன் வைராலஜி ஆய்வகத்தில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டு வைராலஜி ஆய்வக துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.icmr.nic.in/icmrnews/niv_banglore_technician_c.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 1 May 2015

ஐடிஐ & டிப்ளமோ தகுதிக்கு ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனங்களில் பணி

மைசூர் மற்று மேற்கு வங்க மாநிலம், சல்போனி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் நிறுவனத்தில் Industrial Workman பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 15/2015
பணி: Industrial Workman Grade-I (Trainee)
காலியிடங்கள்: 90
சம்பளம்: ரூ.7,000 - 24,240
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Printing Technology, Mechanical, Tool & Die, Electrical, Electronics, Instrumentation, Chemical Engineering போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ பொறியியல் முடித்திருக்க வேண்டும். அல்லது Letter Press, Offset, Platemaking, Graphic Arts, Retoucher, Tool & Die Making, Machanic Machine Tool Maintenance, Machinist, Machinisit Grinder, Turner, Fitter, Instrument Mechanic, Electrician, Electronic Mechanic போன்ற ஏதாவதொரு தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.brpnmpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு கைவசம் வைத்துக்கொள்ளவேண்டும். இவற்றுடன் தேவையான சான்றிதழ்களில் சுயசான்று செய்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு வருகைதரும்போதும் அசல் சான்றிகழ்களுடன் கொண்டுவர வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2015
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2015

Thursday, 30 April 2015

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆயுத தொழிற்சாலையில் பணி

மகாராஷ்டிர மாநிலம், புனேயில் செயல்பட்டு வரும் இராணுவ தொழிற்சாலையில் காலியாக உள்ள MTS பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, தொழிற்திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை  The General Manager, Ordnance Factory, Dehu Road, Pune-412101 என்ற டி.டி அல்லது போஸ்ட் ஆர்டராக எடுத்து செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ofdr.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவாயான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Wednesday, 29 April 2015

HMT நிறுவனத்தில் மேலாளர் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் HMT நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள AGM, DGM, JGM பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: AGM (F), DGM(F), JGM(F)
தகுதி: ICWA, CA முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரு.16,000 - 20,800
பணி: Manager (HR, AGM(HR), DGM(HR)
தகுதி: MSW, MBA (HR), NIPM, PGDPM போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,000 - 18,250
பணி: Chief Security Officer
தகுதி: இந்திய இராணுவம், துணை ராணுவ படைகள் போன்றவற்றில் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,600 - 14,600
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை HMT Machine Tools Limited, Bangalore என்ற பெயருக்கு டி.டி எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR),
HMT Machine Tools Limited,
HMT Bhavan,
No: 59, Bellary Road,
Bangalore - 560032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015
மேலும் பணி வாரியான காலியிடங்கள், தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://hmtindia.com/html/Extranal_Recruitment_Advt_2014.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 28 April 2015

பெல் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Management Industrial Trainees  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Industrial Trainees 
காலியிடங்கள்: 03
தகுதி: ICWAI (Inter) முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சியின் போது வழங்கப்படும் ஊதவித்தொகை: மாதம் ரூ.7,500
பயிற்சி காலம்: 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அஞ்சல், கூரியர், இ-மெயில் மூலமாக விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy.Manager (HR)/BEL,
Post Box No.26,
Ravindranath Tagore, Machilipatnam-521001
E-mail: hrmc@bel.co.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015

Monday, 27 April 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் பணி

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் நிரப்பப்பட உள்ள Research Intern (Under CSIR Diamond Jubilee Research Intern Scheme) பணிக்கு 29 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.
விளம்பர எண்: IN/03/2015
பணி: Research Intern (Under CSIR Diamond Jubilee Research Intern Scheme)
காலியிடங்கள்: 01
தகுதி: EEE, E&I, Computer Science போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: மாதம் ரூ.15,000
கால அளவு: அதிகபட்சமாக 2 வருடங்கள் ஆராய்ச்சி பணி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 29.04.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.04.2015 அன்று காலை 9.30 மணிக்கு
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுபவர்கள் www.csircms.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவ மாதிரியை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அதனுடன் கல்வித்தகுதி, அனுபவம், சாதி சான்றிதழ்கள் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.csircms.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.