Friday, 12 April 2013

Jawaharlal Institute of Post graduate Medical Education and Research-ல் மருத்துவம் சார்ந்த பல்வேறு பணிகள் April 2013 Updates


புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் எனப்படும் Jawaharlal Institute of Post graduate Medical Education and Research எனும் நிறுவன மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன.
Psychiatric Nurse, Junior Occupational Therapist, Junior Physiotherapist, X-ray Technician, Family Welfare Extension Educator, Technical Assistant, Electronic Assistant மற்றும் Psychiatric Social Worker cum Tutor உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை சார்ந்த பணியிடங்கள் உள்ளன. இவற்றைத் தவிர, Orthopatist அல்லது Refractionist, Pharmacist, Medical Records Technician, Sanitary Inspector, Orthodontic Technician, Physiotherapy Technician, Physiotherapy Assistant, Theatre Assistant உள்ளிட்ட மருத்துவ துணைப் பணியிடங்களும் உள்ளன.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், தேர்ச்சி முடிவு செய்யப்படும். காலிப் பணியிடங்கள் குறித்த கூடுதல் விவரங்களை www.jipmer.edu என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிகளில் சேர்வதற்கான அடிப்படை தகுதிகள்:

ஹாக்கத்தான் போட்டிகள் இன்று இந்தியா முழுவதும் துவக்கம் 2013 / 04 / 12 Updates


மத்திய அரசின் திட்டக்குழு மற்றும் தேசிய புதுமைக் குழுமம் இணைந்து நடத்திய ஹாக்கத்தான் (Hackathon) போட்டிகள் இன்று இந்தியா முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டன.
12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஹாக்கத்தான் (Hackathon) போட்டியில் ஆயிரக்கணக்கான இளம் படைப்பளிகள், இயக்குநர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்த போட்டி ஐ.ஐ.டி. மெட்ராஸ், ஐ.ஐ.டி. டெல்லி, டெல்லி பல்கலைக்கழகம் உட்பட 11 இடங்களில் நடத்தப்படுகின்றன.

Friday, 5 April 2013

மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு 2013


தமிழக மீனவர்களுக்கு அதிக அலைவரிசை கொண்ட தகவல் தொடர்பு கருவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர். இதற்கிடையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள், மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி தமிழக மீனவர்களுக்கு பேருதவியாக அமையும் என்கின்றனர் இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்கள்.
கடல் எல்லை குறித்த சிக்கல் காரணமாக, தமிழக மீனவர்கள் உயிரிழப்பு,

ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது 2013


மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,  ஆண்ட்ராய்டு போன்களுக்கான "ஃபேஸ்புக் ஹோம்" என்ற மென்பொருளை வெளியிட்டுள்ளது.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால், ஆண்ட்ராய்டு ஃபோன்கள், ஃபேஸ்புக் இயக்க அமைப்பில் செயல்படும் போன்கள் போல மாறும். ஃபேஸ்புக் வலைத்தளத்தை மிக எளிமையாகக் கையாளவும் இந்த மென்பொருளில் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி முதல் இந்த மென்பொருளை ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்! 2013




அதிக செலவு பிடிக்கும் காரியங்களைக் குறிப்பிட-யானையைக் கட்டித் தீனி போட்டது போல என்பார்கள். அவற்றில் ஒன்றுதான், கார் வாங்குவது என புலம்புபவர்களும் இன்று உண்டு. பெட்ரோல் விலை உயரத் தொடங்கிய பிறகு பலருக்கு இந்த சோக நிலை.
ஆனால், எதிர்காலத்தில் இதில் மாற்றம் வரும் போலிருக்கிறது. ஒரே ஒரு லிட்டர் பெட்ரோலில், ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடிய காரை துபாயைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

Wednesday, 3 April 2013

ரயிலில் இணையதள வசதி: முன்னோடி திட்டம் அறிமுகம் 2013


ஹவ்ரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்னோடி திட்டமாக, ஒய்-ஃபை(wi-fi) இணையதள வசதியை, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் தொடக்கி வைத்தார்.
இதன் மூலம், எந்த தட்பவெட்ப சூழ்நிலையிலும், எந்த பிரதேசங்களிலும் ரயில் செல்லும் போது, பயணிகளுக்கு இணையதள வசதி கிடைக்கும். அனைத்து பெட்டிகளிலும், சாட்டிலைட் தொலைதொடர்பு இணைப்பு வழங்கப்பட்டு, இந்த ஒய்-ஃபை(wi-fi) வசதி செய்யப்பட்டுள்ளது.
ஹவுரா ராஜ்தானி

“செவ்வாய்க் கிரகத்திற்கு பயணம் செல்வதே எனது லட்சியம்” – சுனிதா வில்லியம்ஸ் 2013




செவ்வாய்க் கிரகத்திற்கு பயணம் செல்வதே தனது லட்சியம் என்று இந்தியா வந்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்திற்கு வருகை புரி்ந்த சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பது பற்றி நாசா (NASA) ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மும்பை செல்லும் சுனிதா வில்லியம்ஸ், சமூக நலனுக்கான தேசிய ஆணையம் சார்பில் அங்கு நடத்தப்பட்டு வரும் பணிக்குச் செல்லும் மகளிர் விடுதியில் தங்கியுள்ள பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.

Monday, 1 April 2013

சூரிய ஒளி கடிகாரம்: 1400 ஆண்டுகால அதிசயம் 2013


காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.

ஏப்ரல்4 முதல் பேஸ்புக்கில் போன் பேசலாம்: 2013

சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த 2வாரங்களுக்கு இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கும்? 2013


அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, ஐரோப்பா இடையே கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இணைய தள கம்பிவடம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதால், இணைய தள சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.