Wednesday, 3 April 2013

ரயிலில் இணையதள வசதி: முன்னோடி திட்டம் அறிமுகம் 2013


ஹவ்ரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்னோடி திட்டமாக, ஒய்-ஃபை(wi-fi) இணையதள வசதியை, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் தொடக்கி வைத்தார்.
இதன் மூலம், எந்த தட்பவெட்ப சூழ்நிலையிலும், எந்த பிரதேசங்களிலும் ரயில் செல்லும் போது, பயணிகளுக்கு இணையதள வசதி கிடைக்கும். அனைத்து பெட்டிகளிலும், சாட்டிலைட் தொலைதொடர்பு இணைப்பு வழங்கப்பட்டு, இந்த ஒய்-ஃபை(wi-fi) வசதி செய்யப்பட்டுள்ளது.
ஹவுரா ராஜ்தானி
எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு மார்க்கத்திலும், இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. 6.30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி பயணிகளுக்கு இலவசமாக தற்போது வழங்கப்படுகிறது. இந்த வசதியை, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்கள் போன்றவற்றிலும் படிப்படியாக விரிவாக்கம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment