* இந்தியாவைப் பொறுத்த வரையில் உலோகத் தாதுக்களில் இரும்பு, பாக்சைட், மாங்கனீசு போன்றவை பெருமளவிலும், செம்பு, தங்கம், காரீயம், துத்தநாகம் போன்ற ஓரளவு பங்கு பெற்று வருகின்றன.
* இந்தியாவில் பொதுவாக தாதுப்பொருட்களில் மினரல்ஸ் வளமிகுந்து காணப்படுகின்றன.
* தாதுப்பொருட்கள் தொழிற்சாலைகளின் வைட்டமின்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை இயற்கையின் அன்பளிப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றன.
* அலோகத் தாதுக்களில் மைக்கா, சுண்ணாம்பு போன்றவை அதிகயளவில் காணப்படுகின்றன.
இரும்புத்தாது
* இந்தியா இரும்புத்தாது உற்பத்தியில் 7-வது இடத்தை பெற்றுள்ளது.
* இந்தியாவில் மிக அதிகமாகக் கிடைக்கும் இரும்புத்தாது வகை - ஹேமடைட்.
* இந்தியாவில் இரும்பின் கனிகளில் மாக்னடைட் மற்றும் ஹேமடைட் போன்றவை அதிகயளவில் கிடைக்கின்றன.
* ஹேமடைட்டில் 68 சதவீத இரும்பும், மாக்னடைட்டில் 50 - 60 சதவீத இரும்பும், லிமோனைட்டில் 30 சதவீத இரும்பும் காணப்படுகின்றன.
* சமீபத்திய தகவலின்படி 13000 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது இரும்பு வெட்டியெடுக்கப்படமாலே உள்ளதாகத் தெரிவிக்கிறது. அவற்றில் தரமான இரும்புத்தாது ஒரிசா மாநிலம் கியாஞ்சார், போனை, மயூர்பஞ்ச் மாவட்டங்களில் கிடைக்கிறது.
* பீகார் மற்றும் ஒரிசா ஆகிய இரு மாநிலங்களிலும் இரும்புத்தாது உற்பத்தியில் 75 சதவீதம் பங்களிக்கிறன. எனவே இவை இரண்டையும் இந்திய இரும்புத்தாது படலம் என்று குறிப்பிடுகின்றனர்.
* மத்தியப்பிரதேசத்தில் உள்ள துர்க், பஸ்தார் மாவட்டங்களிலும், சத்தீஸ்கரில் உள்ள ரெய்ப்பூரிலும், தமிழகத்தில் சேலம்(கஞ்சமலை) மற்றும் மதுரையிலும், கர்நாடகாவில் குத்ரேமுக் (சமீபத்தில் மூடப்பட்ட குத்ரேமுக் இரும்புத்தாது தொழிற்சாலை) மற்ரஉம் பாபா புதான் குன்றுகளிலும் இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது.
* ஜப்பானின் உதவியோடு மத்தியப்பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பைலாடிலா சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
* விசாகப்பட்டினத்திலிருந்து இரும்புத்தாது ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
* இந்தியாவின் இரும்புத்தாதுவிற்கு சர்வதேச சந்தையில் நல்ல வாய்ப்புகள் இருந்து வருகின்னறன. காரணம் அதன் தரமே ஆகும்.
மாங்கனீசு
* இரும்பு எஃகுத் தொழிலுக்கு அடிப்படையானது மாங்கனீசு.
* மாங்கனீசில் கலந்துள்ள இரும்பு மிகவும் கடினமானதாகும்.
* மாங்கனீசு இருப்பு வைப்பதில் இந்தியா ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தைப் பெற்று வருகிறது.
* இந்தியாவில் மாங்கனீஸ் உற்பத்தியில் ஒரிசா முதலிடத்தையும், கர்நாடகா இரண்டாமிடத்தையும் பெற்று வருகின்றன.
* உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
பாக்சைட்
* பாரக்சைட் அலுமினியக் கனியாகும்.
* மின்னாற்பகுப்பு முறையில்தான் உலோகத்தைத் தனிமைப்படுத்த முடியும். எனவே அலுமினிய உருக்குத் தொழில் குறைந்த விலையில் மிகுந்த அளவு மின்சக்தி காணப்படும் பகுதிகளிலேயே சாத்தியமாகும்.
* கேரளாவில் ஆல்வாயிலும், தமிழ்நாட்டில் மேட்டூரிலும் அலுமினிய உருக்கு ஆலைகள் அமைந்துள்ளன. விமானக் கட்டுமானத் தொழிலுக்கு மிக முக்கியத் தேவை பாக்சைட் ஆகும்.
* ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
* இங்கு கிடைக்கும் தாதுக்கள் ஜப்பானுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
* தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளில் பாக்சைட் தாது கிடைக்கிறது.
மைக்கா
* மைக்கா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
* உலகிலேயே அதிகயளவு மைக்கா இருப்பு வைத்துள்ள நாடு இந்தியா.
* உலகின் 90 சதவிகித மைக்கா உற்பத்தியை இந்தியா செய்து வருகிறது.
* இந்தியாவில் வெள்ளை மைக்கா, கறுப்பு மைக்கா, ஆம்பர் மைக்கா என மூன்று வகை மைக்கா கிடைக்கிறது.
* இந்தியாவில் மைக்கா உற்பத்தியில் பீகார் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மைக்காவில் 70 சதவீதம் பீகாரில் கிடைக்கிறது.
* பீகாரில் கயா, ஹசாரிபாக், முங்கர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது.
* உயர்தரமான பெங்கால் ரூபி மைக்கா பீகாரில் கிடைக்கிறது.
* பீகாரின் கிரித் துரங்கம், கோதர்பா சுரங்கம் ஆகிய சுரங்கங்களில் அதிகயளவில் மைக்கா உற்பத்தி செய்யப்படுகிறது.
* பச்சை மைக்கா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள நெல்லூர் மாவட்ட ஆத்மபூர் மற்றும் கடூர் சுரங்கங்களிலும், தமிழ்நாட்டில் சேலம், நீலகிரி பகுதிகளிலும், இராஜஸ்தானில் பில்வாரா, ஆஜ்மீர், ஜெய்ப்பூர், உதயப்பூர் பகுதிகளிலும், மத்திய பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டப்பகுதிகளிலும் மைக்கா கிடைக்கிறது.
* மைக்கா உற்பத்தியில் இந்தியா பிரேசில் நாட்டுடன் போட்டியிட்டு வருகிறது.
வெள்ளி
* காரீயம் மற்றும் துத்தநாக தாதுக்களைப் பிரித்தெடுக்கும்போது கிடைப்பதே வெள்ளி.
* வெள்ளியின் முக்கிய சுரங்கம் இராஜஸ்தானில் உள்ள சாவார் சுரங்கம்.
தங்கம்
* 1871 முதல் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் முக்கியச் சுரங்கமாக செயல்பட்டுகிறது. இதுவே உலகின் மிக ஆழமான தங்கச் சுரங்கமாகும்.
* ஹட்டி சுரங்கமும், கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்ட சுரங்கமும் தங்கத்தின் முக்கியச் சுரங்கமாக விளங்குகிறது.
* ஆந்திரப்பிரதேசத்தில் அனத்பூர், ராம்கிரி பகுதிகளிலும் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.
* ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
* இந்தியாவின் தங்க இருப்பு சுமார் 66700 கிலோ ஆகும். தற்போது தங்கத்தின் உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி
* நிலக்கரி அயன மண்டலத்தின் பெருங்காடுகள் படிவங்களால் மூடப்பட்டு, நீண்ட கால அளவில் கரிமமாக்கப்பட்டு தோன்றும் படிவுப்பாறைகள் நிலக்கரி எனப்படும்.
* 1774ல் மேற்கு வங்காளத்தில் உள்ள இராணிகஞ்ச் பகுதி நிலக்கரி வயலில் முதன்முதலாக நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டது.
* தாவரப் பொருட்களை வெப்பமும். அழுத்தமும் நிலக்கரியாக மாற்றுகின்றன. சக்தியின் மூல ஆதாரம் இதுவே ஆகும். எனவேதான் தொழிற்சாலைகளின் தாய் நிலக்கரி என்று அழைக்கப்படுகிறது.
* இரும்பு எஃகு உற்பத்தியில் நிலக்கரி கச்சாப் பொருளாகப் பயன்படுகிறது.
* உலக நிலக்கரி இருப்பு அளவில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது.
* இந்தியாவில் உள்ள நிலக்கரி பெரும்பாலும் பிட்டுமினஸ் வகையைச் சார்ந்தவை. அதாவது தரம் குறைந்த சாம்பலை அதிகமாகத் தரக்கூடிய நிலக்கரி வயல்களே இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.
* இந்தியாவில் இரு வகையான நிலக்கரி வயல்கள் உள்ளன. அவை: 01. கோண்ட்வானா கால நிலக்கரி வயல். 02. டெர்ஷியரி கால நிலக்கரி வயல். இவை சுமார் 2 சதவீதம் மட்டுமே உள்ளது.
* தமிழ்நாட்டில் நெய்வேலி, அஸ்ஸாமின் மகும் பகுதி, இராஜஸ்தானின் பிக்கானிர் போன்ற இடங்களில் டெர்ஷியரி கால நிலக்கரி வயல்கள் உள்ளன.
* கோண்ட்வானா கால நிலக்கரி வயல்களில் மேற்கு வங்காளத்தின் இராணிகஞ்ச் நிலக்கரி வயல் மிகப் பழமையானதாக சுமார் 1267 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.
* ஜார்க்கண்ட் நாநிலத்தின் ஜாரியா, பொக்காரோ, கிரிஷ், கரன்புரா, ராம்கார், டால்டோன்கஞ்ச், அவுரங்காபாத், ஹட்டார் மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களிலும் , * ஆந்திரப்பிரதேசத்தின் சிங்கரேணி பகுதியிலும் (இராமகுண்டம்), மத்தியப்பிரதேசத்தின் கோர்பா பகுதியிலும் நிலக்கரி வயல்கள் உள்ளன.
* இந்தியாவில் நிலக்கரி இருப்பில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ஜார்க்கண்ட ஆகும். இங்கு சமார் 32 சதவீத நிலக்கரி இருப்பு உள்ளது.
* ஜார்க்கண்ட மாநிலம் நிலக்கரி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
* மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் இரண்டும் கூட்டாக நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஒரிசா மூன்றாம் இடத்தில் உள்ளது.
* தமிழ்நாட்டில் நெய்வேலி, குஜராத் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது.
* இந்தியாவின் முதல் மற்றும் முக்கிய நிலக்கரிச் சுரங்கம் தற்போது ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள ராணிகஞ்ச் ஆகும்.
* பெரும்பாலான கோண்ட்வானா கால நிலக்கரி வயல்கள் தமோதர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ளது.
* நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன
* 1983 முதல் உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.
தாமிரம்
* தாமிர உற்பத்தியல் இந்தியா பற்றாக்குறையிலேயே இருந்து வருகிறது.
* தாமிர உற்பத்தியில் மத்தியப்பிரதேசம் முதலிடத்திலும், இராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும் இருந்து வருகின்றன.
* கேத்ரி தாமிரச் சுரங்கம் (இராஜஸ்தான்) மிகவும் புகழ்பெற்றதாகும்.
* இராஸ்தானின் துரதேரரே, கோ தாரிபா ஆகிய இடங்களிலும், ஜார்க்கண்டின் சிங்பம் மாவட்டத்தின் மொசபானி, ரக்கா, தோபனி சுரங்களிலும், ஆந்திராவின் கம்மம் பகுதியும், ஹாசன் மறஅறும் சித்ரதுர்கா (கர்நாடகா) பகுதிகளிலும், இராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் ஜூஞ்ஜூனு பகுதிகளிலும் தாமிர சுரங்கங்கள் அமைந்துள்ளன.
பெட்ரோலியம்
* எரிபொருள் பயன்பாட்டில் முதலிடம் வகிப்பவை பெட்ரோலியம்.
* இந்தியாவில் 1867 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தின் திக்பாய் பகுதியின் மக்கும் என்னும் இடத்தில் பெட்ரோலியம் வெளிக்கொணரப்பட்டது.
* பெட்ரோலியத்தை அதன் முக்கியத்துவத்தின் பொருட்டு திரவத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
* இந்தியாவின் பெட்ரோலியத் தேவையில் 33 சதவிகிதத்தை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. மீதமுள்ள 67 சதவிகித பெட்ரோலியமே இறக்குமதி செய்யப்படுகின்றன.
* இந்தியாவில் அதிக அளவில் பெட்ரோலியம் உற்பத்தி (65 சதவிகிதம்) செய்யப்படும் இடம் மும்பை ஹை ஆகும்.
* மிகக்குறைவாக உற்பத்தி செய்யப்படும் இடம் அருணாச்சலப்பிரதேசம் ஆகும்.
* தமிழ்நாட்டில் சுமார் 14 சதவிகிதம் பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படுகிறது.
* இந்தியாவின் மிகப்பழமையான எண்ணெய்க் கிணறு திக்பாய் எண்ணெய் வயல்.
* குஜராத் காம்பே வளைகுடா பகுதியில் கலோல், அங்கலேஸ்வர், லூனேஜ் ஆகிய இடங்களிலும், அஸ்ஸாமில் திக்பாய், மொரான், ககர்கட்டியா, சிப்சாகர் ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிராவில் மும்பைக் கடற்கரையின் மும்பை ஹை பகுதியிலும், மேலும் மகாராஷ்டிராவின் பசீன் பகுதியிலும் எண்ணெய் வயல்கள் உள்ளன.
* இந்தியாவில் தற்போது 11 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவை: பீகார் மாநிலம் பரெளனி, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, கேரளா மாநிலம் கொச்சி, அஸ்ஸாம் மாநிலம் திக்பாய், குவஹாத்தி, மேற்கு வங்கா மாநிலம் ஹால்தியா, ஆந்திரப்பிர மாநிலம் விசாகப்பட்டினம், .குஜராத் மாநிலம் கயட்டி, தமிழ்நாடு மாநிலம் சென்னை மற்றும் நரிமணம், .உத்திரப்பிரதேசம் மாநிலம் மதுரா, ஹரியானா மாநிலம் கர்னால், குஜராத் மாநிலம் அங்கலேஸ்வார், கலோர், நவகம், கொசம்பா, காதனா, அலியாபெட் தீவுகள் ஆகிய இடங்களில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment