Monday, 31 August 2015

இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தில் டெக்னீசியன் பணி

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் மேற்கு வங்காளத்தில் செயல்பட்டு வரும் இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (Central Mechanical Engineering Research Institute) எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு Scientist, Technical மற்றும் Support staff பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2015
பணி: Scientist Gr.IV
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
வயதுவமர்பு: 07.09.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Staff Gr.III
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 07.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கண்ணி அறிவியல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி கோடு: 150402
காலியிடங்கள்: 01
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோவே முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி கோடு: 150403
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து இரண்டு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி கோடு: 150406
காலியிடங்கள்: 02
தகுதி: Plumber, Sanitary Hardware Fitter டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி கோடு: 150407
காலியிடங்கள்: 01
தகுதி: Carpenter, Carpentry டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி கோடு: 150408
காலியிடங்கள்: 01
தகுதி: Computer Operator, Programming Assistant, IT, Electronic System Maintenance, Computer Hardware & Network Maintenance, Draughtsman (Mechanical) டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதிக அளவு விண்ணப்பதாரர்கள் இருந்தால் எழுத்துத் தேர்வு இருந்தால் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Central Mechanical Engineering Research Institute என்ற பெயரில் ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் துர்காபூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cmeri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.09.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Controller of Administration, CSIR - Central Mechanical Engineering Research Institute, Mahatma Gandhi Avenue, Durgapur - 713209 (West Bengal).
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cmeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 30 August 2015

மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தில் டெக்னீசியன் பணி

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் மேற்கு வங்காளத்தில் செயல்பட்டு வரும் மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (Central Mechanical Engineering Research Institute) எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு Scientist, Technical மற்றும் Support staff பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2015
பணி: Scientist Gr.IV
பணி கோடு: 150401
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
வயதுவமர்பு: 07.09.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Staff Gr.III
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 07.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கண்ணி அறிவியல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி கோடு: 150402
காலியிடங்கள்: 01
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோவே முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி கோடு: 150403
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து இரண்டு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Support Staff Gr.II
காலியிடங்கள்: 07
பணி கோடு: 150404, 150405, 150406, 150407, 150408
தகுதி: Plumber, Sanitary Hardware Fitter, Carpenter, Carpentry, Computer Operator, Programming Assistant, IT, Electronic System Maintenance, Computer Hardware & Network Maintenance, Draughtsman (Mechanical)  டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதிக அளவு விண்ணப்பதாரர்கள் இருந்தால் எழுத்துத் தேர்வு இருந்தால் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Central Mechanical Engineering Research Institute என்ற பெயரில் ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் துர்காபூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cmeri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:07.09.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Controller of Administration, CSIR - Central Mechanical Engineering Research Institute, Mahatma Gandhi Avenue, Durgapur - 713209 (West Bengal).
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cmeri.res.in/oth/docs/Advrt042015Amend.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 28 August 2015

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு

தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், மத்திய அரசு துறைகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பிரிவுக்கு அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளயிட்டுள்ளது எஸ்எஸ்சி. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stenographer (Grade 'C & D')
தேர்வு: Stenographer (Grade 'C & D') Examination -2015
காலியிடங்கள் விவரம்:
1. Stenographer (Grade 'C ')  - 50
2. Stenographer (Grade ' D') - 1014
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100, 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து மற்றும்
கணினியில் தட்டச்சு செய்வதற்கான தகுதி தேர்வில் பெற்றதற்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
எழுத்து தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி.
எழுத்துத் தேர்வில் தவறான பதில்கள் மதிப்பெண் குறைப்பு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினர், அனைத்து பிரிவுகளை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.09.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 27 August 2015

அகர்கர் ஆராய்ச்சி மையத்தில் இணை ஆராய்ச்சியாளர் பணி

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின்கீழ் புனேயில் செயல்படும் MACS-Agharkar ஆராய்ச்சி மையத்தில் தற்காலிக Research Associate பணிக்கான காலியிடம் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விளம்பர எண். Advt./Rec/10/2015
பணி: Research Associate (1)
பணிகாலம்: 31.03.2017 வரை
திட்ட பெயர்: 'Culture Collection Activity' (ARI Project)
சம்பளம்: மாதம் ரூ.36,000 + வீட்டு வாடகை படி
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Microbiology துறையில் முதல் வகுப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Micribiology, Biotechnology-யில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. "Agharkar Research Institute, Pune" என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.airpune.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, பின் தேவையான ஆவணங்களில் அட்டெஸ்ட் நகல்களையும், டி.டி.யையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Director, MACS-Agharkar Research Institute, G.G.Agharkar Road, Pune - 411004.
விண்ணப்பங்கள் சென்று கடைசி நாள்: 31.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airpune.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 26 August 2015

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர்லைன் அட்டன்டென்ட் பணி

 கோழிக்கோடு, மங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் ஏர்லைன் அட்டன்டென்ட் ஆக மூன்று வருட ஒப்பந்தகால அடிப்படையில் பணிபுரிய ஆண், பெண் இருபாலரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Airline Attendants
காலியிடங்கள்: 193
வயதுவரம்பு: 02.09.2015 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹாட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மொழித்திறன்: ஆங்கிலம், இந்தி மற்றும் மேலும் ஒரு இந்திய மொழியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். மலையாளத்தில் சரளமாக பேசும் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "AIR INDIA CHARTERS LIMITED"  என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். டி.டி.யை குழு விவாதத்தின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்கள் Group Dynamics Test, Personality Assessment Test,  Personnel Interview மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindiaexpress.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2015
மேலும் உடல் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.airindiaexpress.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Tuesday, 25 August 2015

ரயில்டெல் கழகத்தில் டெக்னீசியன் பணி

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய ரயில்டெல் கழகத்தில் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் டெக்னீசியன் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician (Operation & Maintenance)
காலியிடங்கள்: 25
பணி இடம்: வடக்கு பிராந்தியமான காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் (ஒரு பகுதி), உத்திரபிரதேசம் (ஒரு பகுதி), உத்தராஞ்சல்ஸ தில்லி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பகுதி ஆகும்.
சம்பளம்: 20,200 + EPF மற்றும் இதர சலுகைககள் வழங்கப்படும்.
தகுதி: Electronics, Electrical, Information Technology, Computer Science, Instrumentation, Electronics & Tele-communication பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் , கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி அல்லது எம்சிஏ அல்லது பிசிஏ முடித்திருக்க வேண்டும். இத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவத்துடன் CCNA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: RailTel Corporation of India Limited, 6th Floor, Block -III, Delhi IT Park, Shastri Park, Delhi - 110053.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 24 August 2015

அணு மருத்துவ மையத்தில் ஆராய்ச்சிப் பணி

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS) நிலையத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: JRF (CSIR/UGC/DST-ல் Fellow Ship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 12
1. Biotech/Biochem/Biomed Sc - 06
2. Chem/Nanotech - 04
3.Coputer Science/Electronics - 01
4. Pharma - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000 + வீட்டு வாடகை படி
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
பணிக்காலம்: மொத்தம் 5 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து inmaslibrary@inmas.drdo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை அனுப்புவதற்கான கடைசி தேதி: 28.08.2015
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 31.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 23 August 2015

ஓமன், குவைத்துக்கு மெஷின் ஆப்பரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள் தேவை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு

ஓமன், குவைத் நாடுகளில் பணிபுரிய மெஷின் ஆப்பரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதலில் பணி அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகின்றனர்.
 இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 22 முதல் 32 வயதுக்குள்பட்ட மெஷின் ஆப்பரேட்டர்கள் (இயந்திரம் இயக்குபவர்கள்) தேவைப்படுகிறார்கள்.
 குவைத் நாட்டில், இந்திய தொலைத்தொடர்பு திட்டப் பணிகளுக்காக எட்டாம் வகுப்புத் தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதுக்குள்பட்ட கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதலில் 2 ஆண்டுகள் அனுபவமுள்ள தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
 மேலும், குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள கனரக வாகன ஓட்டுநர்களும், இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களும் தேவைப்படுகின்றனர். இந்திய கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள், குவைத் கனரக ஓட்டுநர் உரிமம் பெறும் வரை தொழிலாளராகப் பணிபுரிய வேண்டும்.
 தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், அந்த நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும். இந்தப் பணியிடங்கள் தொடர்பான விவரங்கள், ஊதிய விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், கடவுச்சீட்டு ஆகியவற்றின் 2 நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களுடன் முதல் கட்டத் தேர்வுக்கு வர வேண்டும்.
 திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல் கட்டத் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-22502267, 22505886, 08220634389 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 21 August 2015

VKGB - விதர்பா கொங்கன் கிராமிய வங்கி

விதர்பா கொங்கன் கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள 116 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 116
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.  Officer Scale-I - 89
2.  Office Assistant (Multipurpose) - 27
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர் / அக்டோபர் 2014 இல் IBPS  நடத்திய வங்கி தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  www.vkgb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 09.09.2015.
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.vkgb.co.in/downloads/Recruitment_Advertisement2014-15_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 20 August 2015

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி & அலுவலக உதவியாளர் பணி

புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுவை பாரதியார் கிராம வங்கி காலியிடங்கள் விவரம்
1. Officer Scale-I -  07
2. Office Assistant (Multipurpose) - 08
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 03.06.1986 - 31.05.1996க்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: IBPS நடத்திய செப்டம்பர்/ அக்டோபர் 2014 வங்கி தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. SC, ST, PWD, EXSM பிரிவினருக்கு ரூ.20. இதனை செலானை பயன்படுத்தி புதுவை பாரதியார் கிராம வங்கி கிளைகளில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.puduvaibharathiargramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2015.
ஆன்லைன் விண்ணப்ப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.09.2015.
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.puduvaibharathiargramabank.in:81/pdfs/pud_rec_13082015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 18 August 2015

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பொறியாளர் பணி

இந்திய அரசின் விண்வெளித்துறையின்கீழ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளிமையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட், பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாது.
விளம்பர எண்: VSSC-290
பணி: Scientist/Engineer - SD - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: Analytical, Organic, Physical, Polymer Chemistry துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்று NMR Spectroscopy-யை முதன்மை பாடமாக கொண்ட Chemistry, Material Science பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer - SC - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Electrical & Electronics, Electronics & Communication, Mechanaical, Engineering Physics, Electronics & Instrumentation போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது Physics, Applied Physics, Photonics துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Integrated Physics, Electronics துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer - SC - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Metallurgy துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Metallurgical Eng, Material Science துறையில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer - SC - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Metallurgy துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer - SC - 02

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Chemical Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தஞ்சாவூர் முதன்மைமாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி

தஞ்சாவூர் மாவட்டநீதித்துறையில் தமிழ்நாடுநீதி அமைச்சுப் பணியில் காலியாக உள்ள டைப்பிஸ்ட், ஸ்டெனோவின்-டைப்பிஸ்ட், சுகாதார பணியாளர், டிரைவர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் போன்ற பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
1. Typist -  04
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்புயுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு இரண்டிலும் முதுநிலை முடித்திருக்க வேண்டும்.
2. Steno-Typist - 02
3. Masalchi - 01
4. Sanitary Worker - 01
5. Driver - 01
6. Xerox Operator - 01
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பத்துடன் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை, முன்னுரிமைக்கானசான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்றவிதவை மற்றும், கலப்புத் திருமணம் மற்றும் பிற) 1 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (உரிய சான்றுடன்) மற்றும் பிறசான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மைமாவட்ட நீதிபதி, முதன்மைமாவட்ட நீதிமன்றம், தஞ்சாவூர் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.08.2015
மேலும் முழுமையான கல்வித் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/tn/thanjavur என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 17 August 2015

தேசிய உரத் தொழிற்சாலையில் இளநிலை பொறியாளர் பணி

இந்திய அரசின்கீழ் அரியானாவில் செயல்பட்டும் வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் பொறியாயளர் உதவியாளர் கிரேடு II பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 01/2015/JEA
Junior Engineering Assistant Grade-II
மொத்த காலியிடங்கள் - II
பிரிவு: Production
காலியிடங்கள்: 19
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதப் பாடத்தில் 3 வருட பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கெமிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: மெக்கானிக்கல்
காலியிடங்கள்: 07
தகுதி: மெக்கானிக்கல் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: எலக்ட்ரிக்கல்
காலியிடங்கள்: 04
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோவை முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Instrumentation
காலியிடங்கள்: 09
தகுதி: Instrumentation, Electronics பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,000 - 16,400 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: பதின்டா (Bathinda)
விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2015

Sunday, 16 August 2015

மைசூர் பேப்பர் மில்லில் தலைமை நிதி அதிகாரி பணி

மைசூர் பேப்பர் மில்ஸ்  லிமிடெட் நிரப்பப்பட உள்ள தலைமை நிதி அதிகாரி பதவியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருவந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Ref : FPA/732/AOF,  தேதி: 06.08.2015
பதவி: தலைமை நிதி அதிகாரி
வயது வரம்பு: வயது 16.08.2015 தேதியின்படி 50 - 55க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: CA, CA (Inter), CMA முடித்து 12 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.65,000
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பற்றிய பயோடேட்டாவை, தலைமை நிர்வாக அதிகாரி, மைசூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட், பத்ராவதி - 577 302, கர்நாடகம் என்ற அஞ்சல் முகவரிக்கு அல்லது gmhrda@mpm.co.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணபிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mpm.co.in/pdf/2015/advertisement/Chief_Finance_Officer.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 14 August 2015

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் டெக்னிசியன் பணி

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 42 டெக்னிசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 42
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட டிரேடில் 2 வருட ITI முடித்திருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 13 August 2015

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு தினை ஆராய்ச்சி மையத்தில் பணி

விளம்பர எண். o2/2015
பதவி: Skilled Support Staff
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ICAR Unit DSR, Hyderabad என்ற முகவரியில் ஹைதராபாத்தில் உள்ள Budwel Branch-இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்பவும். SC,ST.PH பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.millets.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்ப கட்டண டி.டி. மற்றும் தேவையான சான்றுகளின் சுய அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.millets.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Wednesday, 12 August 2015

சுகாதாரத் துறையில் 89 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள்

சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்ட 89 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேவாணையம் வெளியிட்டுள்ளது.

 இந்த பணிகளுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது பி.எஸ்சி பப்ளிக் ஹெல்த் நர்ஸ் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும் இடஒதுக்கீட்டின் கீழ் சாதிப் பிரிவினருக்கு உரிய வயதுச் சலுகைகள் இந்தப் பணியிடங்களுக்கும் உண்டு. முதலில் எழுத்துத் தேர்வை எழுதவேண்டும். 

இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சம்பளம் ரூ.9.300 - ரூ34,800- ரூ.4,700 என்ற அளவில் இருக்கும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.175-ஐ செலுத்தவேண்டும். ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 11 August 2015

பட்டம், பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு முப்படைகளில் பயிற்சியுடன் பணி

இந்திய ராணுவ அகாடமி (Indian Military Academy), இந்திய கப்பற்படை அகாடமி Indian Naval Academy, விமானப்படை அகாடமி Air Force Academy மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அந்தஸ்திலான பணிகளில் சேர்வதற்கான Combined Defence Service Examination என்ற தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுக்கு இரு முறை நடத்தி வருகிறது.
Combined Defence Services Examination (II) 2015 தேர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வு 01.11.2015 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத்த விரும்புகிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றந.
பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்:
இந்திய மிலிட்டரி அகாடமி - Indian Military Academy
காலியிடங்கள்: 200
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கப்பற்படை அகாடமி - Indian Naval Academy
காலியிடங்கள்: 45
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: பி.இ முடித்திருக்க வேண்டும்.

விமானப்படை அகாடமி - Air Force Academy
காலியிடங்கள்: 32
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1996க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் கொண்ட அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஆபிசர்ஸ் பயிற்சி அகாடமி ஆண்கள் - Officers Traing Academy
காலியிடங்கள்: 175
வயதுவரம்பு: 02.07.1991க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
ஆபிசர்ஸ் பயிற்சி அகாடமி பெண்கள் - Officers Training Academy
காலியிடங்கள்: 12
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பெண் விண்ணப்பதாரர்கள் ஆபீசர்ஸ் டிரபெய்னிங் அகாடமிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் அவர்கள்  அந்த பிரிவை மட்டுமே (OTA) தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆண் விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்சி-க்கு மட்டும் (ராணுவ பிரிவு) விண்ணப்பிப்பவர்கள் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியை மட்டுமே (OTA) தேர்ந்தெடுக்க வேண்டும்.
விமானப்படை பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் AFA-வை தெரிவாக  குறிப்பிட வேண்டும்.
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், கொச்சி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
எழுத்துத் தேர்வு: ராணுவ அகாடமி, கப்பற்படை அகாடமி, விமான படை அகாடமி பிரிவுகளுக்கு ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படை கணிதம் ஆகிய பிரிவுகளில் தலா 2 மணி நேரம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 10 August 2015

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி  சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில்  அளிக்கப்படுகிறது. பயிற்சியின் மொத்த காலம் 100 மணி நேரம் ஆகும்.
தங்கத்தை பற்றிய அடிப்படை அறிவு, விலை கணக்கிடும் முறை, தங்கத்தை அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகை அறியும் முறை, நகை செய்தல்,  ஹால்மா ர்க்கிங், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம்  மற்றும் விதிகள் போன்ற பாடங்களை உள்ளடக்கிய செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதில் தேர்வு எழுதி தேர்ச்சி அடைபவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த சான்றிதழ் பெற்றவர்கள் தேசிய, வணிக, கூட்டுறவு  மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டா ளாராக பணியாற்றவும், நகை அடகு கடை, ஆபரண கடை, நகை வணிகம் செய்யவும் நல்ல வாய்ப்பு உள்ளது.
இப்பயிற்சியில் சேர எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், இளங்கலை, முதுகலை பயின்று வருபவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்புகள் ஆக 9-ம் தேதி முதல் தொடங்க உள்ளதால் இதில் சேர விரும்புவோர்  திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை அலுவலகத்திற்கு வந்து பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களுடன் ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய  பயிற்சி கட்டணம் செலுத்தி சேரலாம்.
பயிற்சி குறித்த விபரங்களுக்கு திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை  04366-227233 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது  8220767261 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Sunday, 9 August 2015

விசாகப்பட்டிநம் கப்பல் கட்டும் தளத்தில் ஸ்டோர் கீப்பர் பணி

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ஸ்டோர் கீப்பர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Superintendent (store)
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 31.08.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல்/ பொருளாதாரப் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து அரசு அல்லது பொதுத்துறை ஸ்டோர்களில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Store Keeper
மொத்த காலியிடங்கள்: 184
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் அரசு/பொதுத்துறை ஸ்டோரில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.08.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்விற்கு வருபவர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களைாயும் கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.irfc-nausena.nic.in/ccpo_index.html என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கல் சென்று சேர கடைசி தேதி: 31.08.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Material Superintendent (For Unit Recruitment Officer),
Material Organisation, Kancharapalem Post, 9, IRSD Area (NAU Shakti Nagar),
Visakhapatnam - 530008, Andharapradesh.