இந்திய கடற்படையில் கோர்ஸ்
கமென்சிங்-ஜனவரி 2017 பயிற்சியின் கீழ் பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும்
லாஜிஸ்டிக்ஸ் கேடர் பிரிவு மற்றும் எஜுகேசன் பிரிவில் தகுதியானவர்களை
தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆண் - பெண்
பட்டதாரி இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின்பு அதிகாரியாக
பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு
விண்ணப்பிப்பவர்கள் 19½ - 25க்குள் இருக்க வேண்டும், கல்வி பிரிவுக்கு
விண்ணப்பிப்பவர்கள் 21 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: லாஜிஸ்டிக்ஸ்
பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ
அல்லது முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சி., பி.காம், பி.எஸ்சி (ஐ.டி.)
இளங்கலை படிப்புடன் நிதி, லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட்,
மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவில் முதுகலை டிப்ளமோ படித்தவர்கள்,
எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி. (ஐ.டி.) முடித்தவர்கள் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி.
இயற்பியல், கணிதவியல், வேதியியல், எம்சிஏ அல்லது பி.இ அல்லது பி.டெக்,
எம்.டெக். முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 157
செ.மீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும், பெண்கள் 152
செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு நல்ல
பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.