Monday, 1 June 2015

முன்னாள் படைவீரர் நலத்துறையில் உதவி இயக்குநர் பணிகள்

முன்னாள் படைவீரர் நலத்துறையில் உதவி இயக்குநர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை வெளியிடப்பட்ட தேதி: 27.04.2015
பணி: உதவி  இயக்குநர்
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: இராணுவத்தில் குறைந்த பட்சம் கேப்டன் அல்லது அதைவிட உயர்ந்த தரண் அல்லது கடற்படையில் அதே தரத்திற்குக் குறையாத பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நாளில் படைப் பணியிலிருந்து ஒய்வு பெற்று 3 ஆண்டு காலத்திற்குள் இருக்க வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இயக்குநர்,
முன்னாள் படைவீரர் நல இயக்ககம், 22, ராஜா முத்தையா சாலை, சென்னை - 600003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.06.2015
மேலும் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, பிற சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.gov.in/exwel என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 31 May 2015

லக்னோ மெட்ரோ ரயிலில் பொறியாளர் & மேலாளர் பணிகள்

லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (LMRC) நிரப்பப்பட உள்ள 73 உதவி பொறியாளர் மற்றும் உதவி மேலாளர், கணக்கு அதிகாரி போன்ற காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 73
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Assistant Engineer - 15
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
2. Junior Engineer - 53
சம்பளம்: மாதம் ரூ.13,500 - 25,520
3. Assistant Manager - 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
4. Accounts Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500
தகுதி: பணி வாரியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பி.இ, பி.டெக், சி.ஏ. ஐசிடபிள்யூஏ போன்றவற்றை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.imrcl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.imrcl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 29 May 2015

அஞ்சல் துறையில் 932 பணிகள்

இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டும் வரும் அஞ்சல் துறையின் உத்திரப் பிரதேச வட்டத்தில்  நிரப்பப்பட உள்ள 932 Postman, Mail Guard, Multi Tasking Staff  போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: உத்திரப் பிரதேசம்
காலியிடங்கள்: 932
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Postman - 602
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
பணி: Mail Guard - 20
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
பணி: Multi Tasking Staff - 310
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400 + பதிவுக் கட்டணம் ரூ.100.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை, பதிவுக்கட்டணம் மட்டும் ரூ.100.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://indiapost.gov.in/pdf/fileuploads/English_Notification_Postman_MG_MTS_Exam_U.P.Circle_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 28 May 2015

புதுதில்லி நகராட்சி கார்ப்பரேஷனில் உதவி ஆய்வாளர் பணிகள்

புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில்  (NDMC) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 18 உதவி ஆய்வாளர் மற்றும் அம்மை பதிவாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Sanitary Inspector  -10
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,500 + தர ஊதியம் ரூ.2,800 + இதர சலுகைகள்.
2. Vaccinator  - 08
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 + தரஊதியம் ரூ.2,000 + இதர சலுகைகள்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2015
மேலும் விண்ணப்பதார்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய
https://www.ndmc.gov.in/home/Application%20for%20ASI%20and%20Vaccinator.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 27 May 2015

தேசிய கனிம வளர்ச்சி கழகம் இளநிலை அதிகாரி பணிகள்

பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 16 இளநிலை அதிகாரி (டிரெய்னி) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil (trainee) - 13
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. Geology (trainee) - 03
தகுதி: நிலவியல் துறையில் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.05.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy.Manager (Personnel) R&P,
Bailadila Iron ORE Mine, Kirandul Complex,
Post. Kirandul, Dist. South Bastar Dantewada,
(Chattisgarh), Pin-494556
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Docs/Careers/Employ%20Noti%20English%203_15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 26 May 2015

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிóட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட உள்ளாட்சித்துறை பொறியியல் பிரிவில் 14 சாலை ஆய்வாளர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஐடிஐ சிவில் டிராப்ட்மேன்சிப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த விதவை பெண்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) மற்றும் மற்ற பிரிவினர் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த இடங்களுக்கு இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
 தகுதியுள்ளவர்கள் வரும் 31-ம்தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சிப்பிரிவு), அறை எண் 203, மாவட்ட ஆட்சியரகம், கரூர்-639 007 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தனி விண்ணப்ப படிவம் இல்லை. வெள்ளைத்தாளில் எழுதி அனுப்ப வேண்டும். கல்வித்தகுதிக்கான சான்றிதழ் நகலை சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் MTS பணிகள்

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள Tradesman Mate, Multi Tasking Staff (Messenger) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Tradesman Mate
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

பணி: Multi Tasking Staff (Messenger)
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CAFVD, Kirkee, Pune-411003 (Maharasthra).
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_2_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.