Friday, 26 September 2014

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி துறையில் பணிஸ்டைபண்டரி டிரெய்னி கேட்டகிரி

இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ரமணா உயர் தொழில்நுட்ப அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 50 சயின்டிபிக் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: ஸ்டைபண்டரி டிரெய்னி கேட்டகிரி - 1
காலியிடங்கள்: 24
இயற்பியல் - 08
தகுதி: இயற்பியல் முக்கிய பாடமாகவும், கணிதம், வேதியியல், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவதொன்றை துணைப் பாடமாகவும் கொண்டு 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மெக்கானிக்கல் - 07
தகுதி: பத்தாம் வகுப்பு தகுதியுடன் 3 வருட டிப்ளமோ, பிளஸ் 2 தகுதியுடன் 2 வருட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் - 07
தகுதி: பத்தாம் வகுப்பு தகுதியுடன் 3 வருட டிப்ளமோ, பிளஸ் 2 தகுதியுடன் 2 வருட எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரிக்கல் - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தகுதியுடன் 3 வருட டிப்ளமோ, பிளஸ் 2 தகுதியுடன் 2 வருட எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.9,300 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.10,500 வீதம் வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் கேட்டகிரி - 1 பிரிவினர் ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600 என்ற சம்பள விகிதத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்/ சி பணியில் அமர்த்தப்படுவர்.
பயிற்சி: ஸ்டைபண்டரி டிரெய்னி கேட்டகிரி - 2.
காலியிடங்கள்: 26
எலக்ட்ரானிக்ஸ் - 08
பிட்டர் - 10
மெஷினிஸ்ட் - 01
வெல்டர் - 01
டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) - 02
டிராப்ட்ஸ்மேன் (சிவில்) - 01
தகுதி: மேற்குறிப்பிடப்பட்ட எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், டிராப்ட்ஸ்மேன் வரையிலான பணிகளுக்கு கல்வித்தகுதி: கணிதம் மற்றும் அறிவியல்
பாடங்களுடன் கூடிய 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ. ஒரு வருட கால ஐடிஐ
முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
லேபரட்டரி - 03.
தகுதி: லேபரட்டரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் கூடிய பத்தாம் வகுப்பு அல்லது +2 வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ. ஒரு வருட ஐடிஐ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட பணி அனுபவம் அல்லது கணிதம், அறிவியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29.09.2014 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.6,200 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.7,200 வீதம் வழங்கப்படும்.
வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் கேட்டகிரி - 2 பிரிவினர் மாதம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400/ 2000 என்ற சம்பள விகிதத்தில் டெக்னீசியன்/ சி அல்லது டெக்னீசியன்/ பி பணியில் அமர்த்தப்படுவர்.
தபாலில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
ADMINISTRATIVE OFFICER III,
RAJA RAMANNA CENTRE FOR ADVANCED TECHNOLOGY,
DEPARTMENT OF ATOMIC ENERGY, PO: CAT,
INDORE 452013. (M.P).
தபாலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcat.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய நீர்வளத்துறையில் பணி

இந்திய நீர்வள ஆதாரங்கள் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் வாட்டர் கமிஷன் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
1. ஸ்கில்டு ஒர்க் அஸிஸ்டெண்ட் - 29
2. அவுட் போர்டு இன்ஜின் டிரைவர் - 06
3. எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் - 04
4. கார்பென்டர் - 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து பணியனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Superintending Engineer,
Central Water Commission,
Hydrological Observation Circle,
Akashdeep Building, 1st Floor,
Pannalal Park,
Varanasi - 221002,
Uttar Pradesh.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cwc.gov.in/main/webpages/active_je.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் மற்றும் ஸ்டைஃபண்ட்ரி டிரெயினி பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சயின்டிஃபிக் அசிஸ்டென்ட்
தகுதி: சிவில், மெக்கானிக்கல், இண்டஸ்ட்ரியல் சேஃப்டி, ஆர்க்கிடெக்சர் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: ஸ்டைஃபண்ட்ரி டிரெயினி
தகுதி: கார்ப்பென்ட்ரி, ப்ளம்பிங், எலக்ட்ரீஷியன், வெல்டர், மில்ரைட், மேசன் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.igcar.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அலகாபாத் உயர் நீதிமன்றம் இளநிலை உதவியாளர் பணி

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Junior Assistant மற்றும் Paid Apprentices உள்ளிட்ட 2341 குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: அலகாபாத் உயர் நீதிமன்றம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2341
பணிகள்:
1. Jr. Assistant
சம்பளம்: மாதம் ரூ 5200. 20,200 + தர ஊதியம் ரூ.2000.
2. Paid Apprentices
சம்பளம்: மாதம் ரூ 5200. 20,000 + தர ஊதியம் ரூ. 1900.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1974 - 01.07.1996 வருடங்களில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. SC,ST பிரிவினருக்கு ரூ.500 + வங்கி சேவை கட்டணம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
தேர்வு நடைபெறும் தேதி: 18.10.2014
விண்ணப்பிக்கும் முறை: www.allahabadhighcourt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு திட்டங்கள், கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.tcsion.com/EForms/html/form1614/Detailed_Advertisement.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய பிரதேச அரசில் அலுவலக உதவியாளர் பணி

மத்திய பிரதேச அரசின் மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள 15 Office Assistant Cum Data Entry Operator Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 15
பணி: Office Assistant Cum Data Entry Operator
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை: கணித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.mpinfo.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mpinfo.org/MPinfoStatic/rojgar/2014/2209/vac18.asp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 25 September 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி

மத்திய அரசின் வேர்ஹவுசிங் துறையில் காலியாக உள்ள ஸ்கில்ட் ஒர்க் அஸிஸ்டெணட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்கில்ட் ஒர்க் அஸிஸ்டெணட்
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பணி: மெக்கானிக்கல், கார்பெண்டர், எலக்ட்ரிஷன்
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 29.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cwc.gov.in/main/downloads/lucknow.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரயில்வே ஊழியர் கூட்டுறவு வங்கியில் கிளார்க் பணி

ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ரயில்வே ஊழியர் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் செப்டம்பர் / அக்டோபர் 2013 ல் IBPS நடத்திய பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: கிளார்க்
காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு மற்றும் இந்தி அறிவு வேண்டும். IBPS நடத்திய பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2013 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். ராஜஸ்தானில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ 5200. 20,200 + தர ஊதியம் ரூ. 1900.
விண்ணப்ப கட்டணம்: இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும்  ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.recbjaipur.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.10.2014
நேர்முகத் தேர்வு நடத்தப்படும் உத்தேசமான தேதி: 09.10.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.recbjaipur.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.