இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ரமணா உயர் தொழில்நுட்ப அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 50 சயின்டிபிக் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: ஸ்டைபண்டரி டிரெய்னி கேட்டகிரி - 1
காலியிடங்கள்: 24
இயற்பியல் - 08
தகுதி: இயற்பியல் முக்கிய பாடமாகவும், கணிதம், வேதியியல், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவதொன்றை துணைப் பாடமாகவும் கொண்டு 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மெக்கானிக்கல் - 07
தகுதி: பத்தாம் வகுப்பு தகுதியுடன் 3 வருட டிப்ளமோ, பிளஸ் 2 தகுதியுடன் 2 வருட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் - 07
தகுதி: பத்தாம் வகுப்பு தகுதியுடன் 3 வருட டிப்ளமோ, பிளஸ் 2 தகுதியுடன் 2 வருட எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரிக்கல் - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தகுதியுடன் 3 வருட டிப்ளமோ, பிளஸ் 2 தகுதியுடன் 2 வருட எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.9,300 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.10,500 வீதம் வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் கேட்டகிரி - 1 பிரிவினர் ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600 என்ற சம்பள விகிதத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்/ சி பணியில் அமர்த்தப்படுவர்.
பயிற்சி: ஸ்டைபண்டரி டிரெய்னி கேட்டகிரி - 2.
காலியிடங்கள்: 26
எலக்ட்ரானிக்ஸ் - 08
பிட்டர் - 10
மெஷினிஸ்ட் - 01
வெல்டர் - 01
டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) - 02
டிராப்ட்ஸ்மேன் (சிவில்) - 01
தகுதி: மேற்குறிப்பிடப்பட்ட எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், டிராப்ட்ஸ்மேன் வரையிலான பணிகளுக்கு கல்வித்தகுதி: கணிதம் மற்றும் அறிவியல்
பாடங்களுடன் கூடிய 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ. ஒரு வருட கால ஐடிஐ
முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
லேபரட்டரி - 03.
தகுதி: லேபரட்டரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் கூடிய பத்தாம் வகுப்பு அல்லது +2 வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ. ஒரு வருட ஐடிஐ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட பணி அனுபவம் அல்லது கணிதம், அறிவியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29.09.2014 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.6,200 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.7,200 வீதம் வழங்கப்படும்.
வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் கேட்டகிரி - 2 பிரிவினர் மாதம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400/ 2000 என்ற சம்பள விகிதத்தில் டெக்னீசியன்/ சி அல்லது டெக்னீசியன்/ பி பணியில் அமர்த்தப்படுவர்.
தபாலில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
ADMINISTRATIVE OFFICER III,
RAJA RAMANNA CENTRE FOR ADVANCED TECHNOLOGY,
DEPARTMENT OF ATOMIC ENERGY, PO: CAT,
INDORE 452013. (M.P).
தபாலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcat.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment