Monday, 20 October 2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கடலோர பகுதிகளில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்களில் காலியாக உள்ள கலங்கரை விளக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: DLL/LHA/2014/1
பணி: Light House Attendant
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 23.10.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரீசியன்,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், ரேடியோ மற்றும் டெலிவிசன் மெக்கானிக் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணியிடங்கள்: தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா.
தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட பரிசீலனை, எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, Directorate of Lighthouses and Lightships, "Deep Bhavan", 5/20, Jaffer Syrang Street, Chennai-600001.

Sunday, 19 October 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் அதிகாரி பணி

இந்திய கப்பல் படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிப் பிரிவுகள்:
1.Naval Armament Inspections Cadre of Executive Branch
வயதுவரம்பு: 19 1/2 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990 - 01.01.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அள்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
2. Education Branch.
வயதுவரம்பு: 21 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990 - 01.07.1994க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: கணிதத்துறையில் இளங்கலை பட்டமும் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றிக்க வேண்டும். அல்லது இயற்பியலில் இளங்கலையும் கணிதத்தில் முதுகலையும் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.ஏ ஆங்கிலம் அல்லது எம்.எஸ்சி வேதியியல் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிறகு அதனை 2 பிரிண்ட் அவுட் எடுத்து அதில் ஒன்றை தேவையான சான்றிதழ்கள் நகல்கள் (சுயசான்று செய்யப்பட்ட) இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 04.11.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No.04, RK Puram Main PO, New Delhi - 110066.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

BHEL நிறுவனத்தில் சிவில் மேற்பார்வையாளர் பணி

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் தில்லி பிரிவில் சிவில் பொறியியல் துறையில் மேற்பார்வையாளர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Supervisors (Civil)-FTA
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளண்: மாதம் ரூ.23.370
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சிவில் பொறியியல் துறையில் முழு நேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு தில்லி, சென்னை மற்றும் திருச்சி நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து அனுப்பப்படும்.
ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Manager (HR), Industry Sector, Bharat Heavy Electricals Limited, Integreted Office Complex, Lodhi Road, New Delhi-110003 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட்அவுட் சென்று சேர கடைசி தேதி: 23.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in/rectfta/index.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 18 October 2014

பெங்களூர் மின்சாரம் விநியோகம் செய்யும் கம்பெனியில் உதவி பொறியாளர் பணி

பெங்களூர் மின்சாரம் விநியோகம் செய்யும்  BESCOM நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Assistant Engineer (Electrical/Civil) , Junior Engineer மற்றும் Accounts Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 37
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Assistant Engineer - 15
(i) Electrical - 12
(ii) Electrical Graduate - 02
(iii) Civil - 01
2. Assistant Accounts Officer - 03
3. Junior Engineer (Electrical)/ Store Keeper - 15
4. Junior Engineer - 04
(i) Electrical - 03
(ii) Civil - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
AE பணிக்கு மாதம் ரூ.18.380 - 32.610
JE பணிக்கு மாதம் ரூ. 11.750 - 29.070
AAO பணிக்கு மாதம் ரூ.18.380. - 32.610
விண்ணப்பிக்கும் முறை: www.bescom.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2014
மேலும் பணிவாரியான தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள் தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bescom.org/wp-content/uploads/2014/09/AE-JE-HK-Employment-Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகாரி பணி

தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சார்ந்த ஷெட்யூல்டு வங்கியான லட்சுமி விலாஸ்  வங்கியில் நிரப்பப்பட உள்ள Probationary Officer (PO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: The Lakshmi Vilas Bank Limited
பணி: Probationary Officer (PO)
கல்வி தகுதி:. பொறியியல் துறையில் முதல் வகுப்பி பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வருட வருமானம்: ரூ. 4.00 லட்சம்
விண்ணப்ப கட்டணம்: ரூ.600.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.lvbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.lvbank.com/UserFiles/File/POAdvertisement_Oct2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஐடிஐ தகுதிக்கு பாதுகாப்புப்படையில் பணிகள்

இந்தியா மற்றும் திபெத்திய எல்லைப் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள ஹெட்கான்ஸ்டபிள் - டெலிகம்யூனிகேஷன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 229
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: குறைந்த பட்சம் 45 சதவிகித மதிப்பெண்களுடனும்  இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களைக் கொண்ட பிரிவில் +2 முடித்தவர்கள், பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்து விட்டு எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., அல்லது எலக்ட்ரிக்கல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடல் தகுதி: குறைந்த பட்சம் 170 செ.மீ., உயரமும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவும் குறைந்த பட்சம் 80 செ.மீ.,யும் 5 செ.மீ., விரிவடையும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப்பை அங்கீகரிக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் பெற்று, பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை தெளிவாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Inspector General (Central) Frontier HQ,
ITB Police, Plot No. 163-164 (E-8), Trilochan Nagar, P.O.-TrilangaNear Shahpura,
Bhopal (MP), PIN Code-462039.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/Detailed%20Advt.%20HC%20(TEL)%202014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 17 October 2014

IISCO இரும்பு ஆலையில் ஜூனியர் மேலாளர் பணி

இரும்பு உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் செயில் நிறுவனத்தின் IISCO ஸ்டீல் ஆலையில் காலியாக 89 Junior, Dy, and Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 89
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Jr. Manager (Safety) - 13
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
2. Dy. Managers Grade : E3 - 73
வயதுவரம்பு: ரூ.32,900 - 58,000
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
3. Assistant Managers (CCP-Oprn) Grade-E2 - 03
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து தொழில்துறை பாதுகாப்பு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணைளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.