Tuesday, 20 January 2015

காரைக்கால் வானொலி நிலைய தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் வானொலி நிலைய தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை) நிலைய உதவி இயக்குனர் சித்ரலேகா சுகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை 100.3) யில் தாற்காலிக அறிவிப்பாளராக பணியாற்ற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 50 வயதுக்கு மிகாதவராக, குறைந்தபட்சம் பட்டதாரி தகுதியுடையவராக, நல்ல குரல் வளம், கலை இலக்கியம் நாட்டு நடப்புகளில் ஆர்வம் உள்ளவராக இருப்பின் இந்த தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
 ஒரு முழு வெள்ளைத்தாளில் பெயர்,முழு முகவரி,தொலைபேசி எண் ,தங்களின் கலை இலக்கியம் தொடர்பான விபரங்கள்,வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகள் வழங்கி இருப்பின் அவை குறித்த விபரம், வயது,கல்வித்தகுதி, கணினி பயிற்சி போன்ற விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சான்றுக்கான நகல்களுடன் காரைக்காலிலிருந்து 15 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டும்  நிலைய இயக்குநர்,காரைக்கால் பண்பலை வானொலி நிலையம்,நேரு நகர்,காரைக்கால் 609 605 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 மேலும் குரல் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.300, எஸ்.சி,எஸ்.டி  பிரிவினர் ரூ.225 க்கான வங்கி வரைவோலை (ஈஈ) நிலைய இயக்குனர், ஆல் இண்டியா ரேடியோ,காரைக்கால் என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது அலுவலக நாள்களில் நிலையத்தில் நேரிலும் பணமாக செலுத்தி ரசீது பெற்று ரசீதினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கலாம்.வங்கி வரைவோலையின் நகல் குரல் தேர்வின் போது  சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டண சலுகை பெற உரிய சாதி சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும்.  விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி மாதம் 28 ம் தேதியாகும்

Monday, 19 January 2015

பொது காப்பீட்டு நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி

மத்திய அரசுக்கு சொந்தமான பொது காப்பீட்டு நிறுவனத்தில் (General Insurance Corporation)காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Scal-I)
காலியிடங்கள்: 65
வயதுவரம்பு: 31.12.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,240 - 32,640
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழுவிவாதம் மூலம் தகுதியனவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 01.03.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: https://psu.shine.com/company/general-insurance-corporation-ltd என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Th ADVERTISER-GIC RE,
POST BOX NO.10737,
SECTOR-7,ROHINI,
DELHI-110085.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி

மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF) காலியாக உள்ள 800 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF)
மொத்த காலியிடங்கள்: 800
பணி: Constables, Fire
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2000
வயது வரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. SC,ST மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
கல்வி தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_14_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 18 January 2015

எல்லை பாதுகாப்பு படையில் உதவி விமான மெக்கானிக் பணி

எல்லை பாதுகாப்பு படையில் (BSF)நிரப்பப்பட உள்ள 45 உதவி விமான மெக்கானிக் (துணை இன்ஸ்பெக்டர்) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி விமான மெக்கானிக் (துணை இன்ஸ்பெக்டர்)
பணி இடம்: தில்லி
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை “Commandant 25 BN BSF” Payable at SBI-ADB Najafgarh, Code No-001419 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bsf.nic.in/doc/recruitment/r10.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மருத்துவ ஆய்வக உதவியாளர் பணி

ஒடிசா அரசின் மருத்துவ துறையில் காலியாக உள்ள 46 மருத்துவ ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Laboratory Assistant
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.odishassc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.1.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.odishassc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 17 January 2015

பட்டதாரிகளுக்கு மால்வா கிராம் வங்கியில் பணி

மால்வா கிராமிய வங்கியில் காலியாக உள்ள 32 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: மால்வா கிராமிய வங்கி
காலியிடங்கள்: 32
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-III - 02
2. Officer Scale-II (General Banking Officer)- 09
3. Officer Scale-II (IT- Information and Technology)- 02
4. Officer Scale-II (CA- Charted Accountant)- 01
5. Officer Scale-II (Law Officer- 01
6. Officer Scale-II (Agricultural Officer)- 01
7. Officer Scale-I- 16
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: IBPS செப்டம்பர் , அக்டோபர் 2014 அன்று நடத்திய தேர்வில் பெற்ற மத்திப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.malwagraminbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.malwagraminbank.com/Draft%20Ad%20for%20MGB%20from%20IBPS%2001.01.2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கனநீர் வாரியத்தில் பல்வேறு பணி

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்து செயல்பட்டு வரும் கனநீர் வாரியத்தில் காலியாக உள்ள 177 Trainee (Category – I & II), Technician (C/D) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: HWB/2/2014
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Category – I Trainee
காலியிடங்கள்: 62
சம்பளம்: மாதம் ரூ.9300
தகுதி: கெமிக்கல், மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல்,இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேசன் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியில் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Category – II Trainee
காலியிடங்கள்: 105
சம்பளம்: மாதம் ரூ.6200
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technician (C/D)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200
தர ஊதியம்: ரூ. 2400, 2800
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் அறிவியல் மற்றும் கணிதம் பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.