Saturday, 30 March 2013

3 பேருடன் விண்ணுக்குச் செல்கிறது சோயுஸ் 2013


ரஷ்யாவின்  சோயுஸ் (Soyuz) விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் நாளை விண்ணுக்குச் செல்கிறது.
எக்ஸ்பெடிஷன் 35 (Expedition 35) எனப்படும் விண்வெளிப் பயணித்திற்கு செல்ல உள்ள சோயுஸ் விண்கலம், கஜகஸ்தானிலுள்ள பிகானீர் ஏவுதளத்திற்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்திய நேரப்படி இந்த ராக்கெட் மார்ச் 29, அதிகாலை 2.13 மணிக்கு ஏவுதற்கு தயார் நிலையில் உள்ளது.

நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன் 2013


தகவல் தொழில்நுட்பத் துறையின் எழுச்சி மனிதனின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மிக இளைய வயதில் கோடீஸ்வரனாவதும் இதில் ஒன்று. facebook தளத்தின் மார்க் ஃஜூக்கர்பர்க் (Mark Zuggerburg) இந்தப் போக்கை தொடங்கி வைத்த நிலையில், இந்த வரிசையில் லண்டனை சேர்ந்த 17 வயது நிக் டி அலிஸியோ (Nick de Aloisio)-வும் இப்போது சேர்ந்துள்ளார். மிகக்குறைந்த வயதில் இவர் செய்த சாதனைகளையும் இதன் பின்னணிகளையும் காணலாம்.
கோடிகளில் சம்பாதிக்கும் பள்ளி மாணவன்:
லண்டனின் புறநகர் பகுதியான விம்பிள்டனில் வசிக்கும் சிறுவன் நிக் டி அலிஸியோ. ஸ்மார்ட் போன்களில் செய்திகளை எளிதாக படிப்பதற்காக இவர் உருவாக்கிய சம்லி அப்ளிகேஷன் என்ற மென்பொருள் பயன்பாடுதான் இவரை உலகளாவிய பிரபலமாக்கியுள்ளது. அதோடு பள்ளியில் படிக்கும் போதே கோடீஸ்வரன் என்ற

Friday, 22 March 2013

சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 221 பணிகள் 2013


சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் 221 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில், அலுவலக மற்றும் நிர்வாக ரீதியிலான காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படை, குறுகிய கால பணி மற்றும் நிரந்தரப் பணி வகையிலா‌வை.
தேர்வு செய்யப்படுபவர்கள், டெல்லி அல்லது சி.பி.எஸ்.இ-யின் பிராந்திய அலுவலகங்களில் பணியில் அமர்த்தப்படுவர். செயலாளர், பிராந்திய இயக்குநர், உதவிப் பேராசிரியர், இணை இயக்குநர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர், உதவியாளர், கணக்கர், இளநிலை கணினி உதவியாளர் உள்ளிட்ட வேறுபட்ட பிரிவுகளில், பல்வேறு காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை www.cbse.nic.in என்ற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

Translational Health Science and Technology Institute-ல் Scientist மற்றும் Senior Scientist பணிகள் 2013


ஹரியானாவில் உள்ள Translational Health Science and Technology Institute-ல் Scientist மற்றும் Senior Scientist காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப் படுபவர்கள், ஹெச்.ஐ.வி தடுப்பு மருந்து வடிவமைப்பு திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்தப்படுவர். எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த ஆய்வுகளை துரிதப்படுத்தவும், மேம்படுத்தவும் அமெரிக்க அரசு திட்டமிட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.