சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் 221 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில், அலுவலக மற்றும் நிர்வாக ரீதியிலான காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படை, குறுகிய கால பணி மற்றும் நிரந்தரப் பணி வகையிலாவை.
தேர்வு செய்யப்படுபவர்கள், டெல்லி அல்லது சி.பி.எஸ்.இ-யின் பிராந்திய அலுவலகங்களில் பணியில் அமர்த்தப்படுவர். செயலாளர், பிராந்திய இயக்குநர், உதவிப் பேராசிரியர், இணை இயக்குநர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர், உதவியாளர், கணக்கர், இளநிலை கணினி உதவியாளர் உள்ளிட்ட வேறுபட்ட பிரிவுகளில், பல்வேறு காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை www.cbse.nic.in என்ற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய அலுவலங்களில், தற்காலிக மற்றும் நிரந்தர பணிகளுக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் முறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கு ஏற்ப அதிகபட்ச வயது வரம்பு 56 வயது வரை, வேறுபட்ட நிலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.
உதவி இயக்குநர், உதவிப் பேராசிரியர், மூத்த கணக்காளர், செயல் உதவியாளர், கணக்காளர், இளநிலை கணக்காளர், இளநிலைப் பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்கள், அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிச் சோதனைகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி கடைசி நாள். பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி, ஊதியம், பணிக்காலம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.cbse.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment