Friday, 22 March 2013

Translational Health Science and Technology Institute-ல் Scientist மற்றும் Senior Scientist பணிகள் 2013


ஹரியானாவில் உள்ள Translational Health Science and Technology Institute-ல் Scientist மற்றும் Senior Scientist காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப் படுபவர்கள், ஹெச்.ஐ.வி தடுப்பு மருந்து வடிவமைப்பு திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்தப்படுவர். எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த ஆய்வுகளை துரிதப்படுத்தவும், மேம்படுத்தவும் அமெரிக்க அரசு திட்டமிட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இத்தகைய ஒரு ஒப்பந்தம் Translational Health Science and Technology Institute மற்றும் International AIDS Vaccine Initiative ஆகிய அமைப்புகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகளாக பணிபுரியத் தேவையான அடிப்படை கல்வித் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் www.thsti.res.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
விண்ணப்பங்கள் மற்றும் விவரக் குறிப்புகளை hvtr@thsti.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் ஒன்றாம் தேதி கடைசி நாள். தேவையான அளவு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும்  வரை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பணியமர்த்தல் நடைபெறும்.

No comments:

Post a Comment