சிறப்பு ஆசிரியர்கள் தவிப்பு:
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பணி நியமனம் பெற்ற சிறப்பு ஆசிரியர்கள், மாதத்திற்கு 12 அரை நாட்கள் வேலை செய்து, 5,000 ரூபாயை தொகுப்பூதியமாக பெறுகின்றனர். கடந்த ஏப்ரலில் மூன்று வாரங்கள் மட்டுமே வேலை நாட்கள் என்பதால் 3,750 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறைக் காலமான இந்த மே மாதத்திற்கு அதுவும் கிடையாது என்பதால் சிறப்பு ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

பணி நிரந்தம் செய்ய கோரிக்கை:
புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை, கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் சிறப்பு ஆசிரியர்கள் பல முறை மனு அளித்துள்ளனர். பள்ளி விடுமுறை நாட்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை விளக்கம்:
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தமிழக அரசின் ஆணை நிறைவேற்றப்படுகிறது, ஒப்பந்த விதிகளின் படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுகிறது என்ற பதில் கிடைத்தது.

No comments:
Post a Comment