Wednesday, 29 May 2013

பார்வையாளர்களை பரவசப்படுத்தும் படகுப் போட்டி

பார்வையாளர்களை பிரமிக்கச் செய்யும் பாய்மர படகுப் போட்டியின் தேசிய அளவிலான பந்தயம் சென்னை துறைமுகம் கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது
.
மூன்றாவது தேசிய அளவிலான டுவெண்டி நையனர் பாய்மரப் படகுப் போட்டியில், தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் 24 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவை 12 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடவர் மகளிர் என்ற பாகுபாடு இந்தப் போட்டியில் இல்லை.
போட்டி பற்றிய குறிப்புகள்
ஆழமான கடலில் சுழன்றடிக்கும் காற்றின் மத்தியில் நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டி மற்ற பந்தயங்களைப் போல் நடைபெறாது. பந்தயத்தில் பங்கேற்கும் படகை விரைவாகச் செலுத்த மோட்டார் உள்ளிட்ட எந்த கருவிகளும் படகில் கிடையாது. காற்று வீசும் திசைக்கு ஏற்ப படகை இயக்கும் போது சில நேரங்களில் படகு கவிழும் அபாயமும் உள்ளது.

டுவெண்டி நையனர் என்றழைக்கப்படும் இந்த வகைப் போட்டியில் ஒரு படகில் இரண்டு வீரர்கள் படகைச் செலுத்துவர். ஆரம்பம் மற்றும் தொடுகோட்டை போட்டி நடப்பதற்கு முன்பு, காற்று வீசும் திசையை அறியும் கருவி கொண்டு போட்டி நடைபெறும் களத்தை ஒவ்வொரு நாளும் நடுவர்கள் தீர்மானிக்கின்றனர்.

காணொளி:click here

No comments:

Post a Comment