Friday, 9 August 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: சமூக அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள் Part 1

*  ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு - 1870
*  சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் - மஞ்சு ஆட்சிக்காலம்
*  ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600
*  பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் - கால்பர்ட்
*  சீனக் குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்
*  உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் - கெய்சர் இரண்டாம் வில்லியம்
*  ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிட்டானியா
*  பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா
*  பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி
*  ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்

*  இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை - வெர்சேல்ஸ் உடன்படிக்கை
*  முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்
*  இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் - சர். வின்ஸ்டன் சர்ச்சில்
*  பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்
*  ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945
*  பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - திஹேக்.
*  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ
*  1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர் கலகம்
*  குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி - நிலவரி
*  பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு - 1856
*  முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்
*  சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - ராஜராம் மோகன்ராய்
*  சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்
*  இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - பேலூர்
*  சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்
*  தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி - ஈ.வெ. ராமசாமி
*  இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
*  சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது - தேசியம்
*  முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் - மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
*  பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - திலகர்
*  சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை - சத்தியாகிரகம்
*  சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி - சுயராஜ்ஜியம்
*  இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் - லின்லித்கோ
*  நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது - ஜின்னா
*  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - ஜனவரி 26. 1950
*  இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் - டாக்டர் இராஜேந்திரபிரசாத்
*  வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் - திப்புசுல்தான் மகன்கள்
*  வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் - இராஜ கோபாலச்சாரியார்
*  வைக்கம் அமைந்துள்ள இடம் - கேரளா


No comments:

Post a Comment