Wednesday, 30 December 2015

விமானப்படையில் அதிகாரி பணி

இந்திய விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள Commissioned Officer பணிகளுக்கு தகுதியான இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Commissioned Officer (Flying Branch)
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் கணிதப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Commissioned Officer (Technical Branch)
வயதுவரம்பு: 20 - 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற பாடங்களை முக்கிய பாடமாக கொண்டு Aeronautical Engineering படிப்பை முடித்து பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Commissioned Officers (Ground Duty Branch)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.காம், எம்.காம், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்திருக்க வேண்டும். இந்திய விமானப்படையின் கல்விப்பிரிவில் பணிபுரிய குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் Air Force Common Admission Test (AFCAT)-2016 தகுதித்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.02.2016
தமிழகத்தில் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோவை(சூலூர்), தஞ்சாவூர்
விண்ணப்பிக்கும் முறை: www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015
மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பிப்பவர்கள் தொடர்ந்து www.careerairforce.nic.in  இணையதளத்தை கவனித்து வரவும்

No comments:

Post a Comment