இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் (SSC Technical) காலியாக உள்ள 91 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்த இருபாலகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer (SSC Technical-47th Short Service Commission) ஆண்கள் மட்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
துறை: சிவில் - 25
துறை: மெக்கானிக்கல் - 15
துறை: ஆட்டோமொபைல் மற்றும் வொர்க்ஷாப் டெக்னாலஜி - 02
துறை: ஏரோநாட்டிக்கல், ஏவியேஷன், ஏரோஸ்பேஸ், பாலிஸ்டிக்ஸ், ஏவியோனிக்ஸ் - 02
துறை: கம்ப்யூட்டர்/ஐடி பொறியாளர் - 10
துறை: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன்ஸ், சேட்டிலைட் கம்யூனிகேசன்ஸ் - 15
துறை: எலக்ட்ரானிக்ஸ், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் -07
துறை: ஃபுட் டெக்னீசியன்/பயோ டெக்னீசியன் - 03
துறை: பயோ மெடிக்கல் - 02
பணி: Engineer (SSC Technical-18th Short Service Commission) பெண்கள் மட்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
துறை: சிவில் - 04
துறை: மெக்கானிக்கல் - 02
துறை: எலக்ட்ரிக்கல் - 02
துறை: டெலிகம்யூனிகேசன் - 02.
தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயது வரம்பு: 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment