Monday, 26 May 2014

Bhabha அணு ஆராய்ச்சி மையத்தில் பணி

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) நிரப்பப்பட உள்ள 27 தொழில்நுட்ப அதிகாரி/சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்: 02/2014 (R-IV)
மொத்த காலியிடங்கள்: 27
பணி: தொழில்நுட்ப அதிகாரி/சி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Electrical - 03
02. Electronics - 03
03. Mechanical - 02
04. Physics - 10
05. Chemistry - 09
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.5400.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி மற்றும் அனுபவம் விவரம்: சம்மந்தப்பட்ட துறைகளில் BE/B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல்/வேதியியல் துறையில் M.Sc முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. (SC/ST/PWD/பெண்கள் எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு எஸ்எஸ்சியில் சயின்டிபிக் உதவியாளர் பணி

Staff Selection Commission(SSC)-ன் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Scientific Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Epigraphist (Dravidian Inscription)
காலியிடம்: 01
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இந்திய வரலாறு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று தமிழ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant
காலியிடம்: 05
வயதுவரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தாவரவியல், விலங்கியல், விவசாயம் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை அஞ்சல் நிலையத்தில் கட்டணமாக செலுத்தி அதற்குரிய CRFS ரசீதை விண்ணப்பத்தில் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். SC/ST/PH மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ssckkr.kar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Director, Staff Selection Commission, 1st Floor, E-Wing, Kendriya Sadan, Koramangala, Bangalore - 560034.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014.

Sunday, 25 May 2014

பிஇ/எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அதிகாரி பணி

மத்திய அரசின் கீழ் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேட்டகிரி: I
பணி: Technical Officer/C (Electrical)
காலியிடங்கள்: 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: II
பணி: Technical Officer/C (Electronics)
காலியிடங்கள்: 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பிஇ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: III
பணி: Technical Officer/C (Mechanical)
காலியிடங்கள்: 02
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் துறையில் பிஇ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: IV
பணி: Technical Officer/C (Physics)
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்
கேட்டகிரி: V
பணி: Technical Officer/C (Chemictry)
காலியிடங்கள்: 09
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 35-க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 38-க்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 40-க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவங்களை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் பணமாக செலுத்தலாம். கட்டணம் செலுத்தியதற்கான செலானை நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டு வர வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் நேர்முகத் தேர்வில் அவர்களது செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.
ஆண்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014

நிட்டி நிறுவனத்தில் பொறியாளர் பணி

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டஸ்ட்ரீயல் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பெறாறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பொறியாளர்
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitie.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மும்பை பொறியாளர் குழுமத்தில் Messenger, LDC பணி

மும்பை பொறியாளர் குழுமத்தில் Messenger மற்றும் Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 06
பணி மற்றும் காலியிடங்கள்:
01. Messenger - 01
02. Lower division clerk - 05
வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
Messenger பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LDC பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Messenger பணிக்கு மாதம் ரூ.5200 . 20,200 + தர ஊதியம் ரூ.1800
LDC பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900
விண்ணப்பிக்கும் முறை:  http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant,
Bombay Engineer Group and Centre,
Kirkee, Pune - 411003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10607_1_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, 24 May 2014

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான  (இஸ்ரோ) தற்காலிக அடிப்படையில் காலியாக உள்ள Technician , Draughtsman, Catering Attendant போன்ற பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Technician-B - 08
1. Fitter - 02
2. Refrigeration & Air Conditioning: 02
3. Diesel Mechanic - 01
4. Plumber - 02
5. Electrician - 01
B. Draughtsman-B - 01
1. Civil
C. Catering Attendant - 02
வயது வரம்பு :
1 Technician & Draughtsman பணிக்கு 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்..
2 Catering Attendant பணிக்கு - 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: SSLC முடித்து சம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும்.
சம்பளம். மாதம் ரூ 5200 - 20,200 + தர ஊதியம் ரூ. 2000.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்கள் அனைத்தும் சான்றொப்பம் பெற்று கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Administrative Officer,
Master Control Facility,
Salagame Road, PB No.66, Hassan-573201
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://isro.gov.in/pdf/MCF-advt-pga-01-2014.pdf இணையதளத்தைப் பார்க்கவும்.

பார்மசிஸ்ட் முடித்தவர்களுக்கு மருந்து கிடங்குகளில் பணி

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்த மருந்துகளை வழங்கி வரும் 21 மருந்து கிட்டங்குகளில் காலியாக உள்ள பார்மசிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பார்மசிஸ்ட்:
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: மாநில அரசின் மருத்துவத் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது மாநில அரசின் மருத்துவத்துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பார்மசிஸ்ட்டாக பணியாற்றியிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் பார்மசிஸ்ட்:
வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும.
பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
வயதுவரம்பு: 24 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
குறிப்பு: மேற்கண்டஜூனியர் பார்மசிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இரு பணிகளும் ஒப்பந்த அடிப்படையிலானவை. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mohfw.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2014.