மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்த மருந்துகளை வழங்கி வரும் 21 மருந்து கிட்டங்குகளில் காலியாக உள்ள பார்மசிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பார்மசிஸ்ட்:
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: மாநில அரசின் மருத்துவத் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது மாநில அரசின் மருத்துவத்துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பார்மசிஸ்ட்டாக பணியாற்றியிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் பார்மசிஸ்ட்:
வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும.
பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
வயதுவரம்பு: 24 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
குறிப்பு: மேற்கண்டஜூனியர் பார்மசிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இரு பணிகளும் ஒப்பந்த அடிப்படையிலானவை. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mohfw.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2014.
No comments:
Post a Comment