Sunday, 25 May 2014

பிஇ/எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அதிகாரி பணி

மத்திய அரசின் கீழ் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேட்டகிரி: I
பணி: Technical Officer/C (Electrical)
காலியிடங்கள்: 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: II
பணி: Technical Officer/C (Electronics)
காலியிடங்கள்: 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பிஇ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: III
பணி: Technical Officer/C (Mechanical)
காலியிடங்கள்: 02
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் துறையில் பிஇ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: IV
பணி: Technical Officer/C (Physics)
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்
கேட்டகிரி: V
பணி: Technical Officer/C (Chemictry)
காலியிடங்கள்: 09
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 35-க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 38-க்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 40-க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவங்களை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் பணமாக செலுத்தலாம். கட்டணம் செலுத்தியதற்கான செலானை நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டு வர வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் நேர்முகத் தேர்வில் அவர்களது செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.
ஆண்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014

No comments:

Post a Comment