Tuesday, 4 November 2014

பாராளுமன்ற லோக்சபை செயலகத்தில் ஸ்டெனோகிராபர் பணி

இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபை செயலகத்தில் தற்போது காலியாக உள்ள சுருக்கெழுத்தர், பணியாளர் வாகன ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 5ய2014
பணி: Stenographer (English/Hindi)
காலியிடங்கள்: 41
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Staff Car Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டுவதில் திறமையும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Joint Recruitment Cell, Room No: 521, Parliament House, Annexe, New Delhi - 110001.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.loksabha.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 3 November 2014

அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல் துறையில் வானொலி ஆப்பரேட்டர், சைபர் ஆப்பரேட்டர் பணி

அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல் துறையில் 13 வானொலி ஆப்பரேட்டர், சைபர் ஆப்பரேட்டர், வானொலி டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல் துறை
மொத்த காலியிடங்கள்: 13
பணி மற்றும் காலியிடங்கள்:
1.ரேடியோ ஆபரேட்டர்: 11
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
2. சைபர் ஆபரேட்டர் - 01
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ..4200.
3. வானொலி தொழில்நுட்பவியலாளர் - 01 
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: +2 தேர்ச்சியுடன் ரேடியோ டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் துறை அல்லது BCA முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Superintendent of Police (HQ). Police Head Quarter, Atlanta Point,Port Blair
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://db.and.nic.in/vacancy/UploadedFiles/782.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 2 November 2014

திருச்சி என்.ஐ.டி-யில் பேராசிரியர் பணி

தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்: 02/FAC/ADVT/2014
பணி: Assistant Professor
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.8000.
பணி: Associate Professor
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.8000.

பணி: Professor
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10500
கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, National Institute of Technology, Tiruchirapalli - 620015, Tamilnadu, India.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர தேதி: 10.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/dotcom/AppData/Local/Temp/NITT-faculty-recruitment-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஜார்க்கண்ட்டில் இளநிலை பொறியாளர் பணி: Jssc அறிவிப்பு

ஜார்கண்ட் மாநில அரசில் காலியாக உள்ள  இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான இளநிலை பொறியாளர் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு 2014-க்கானஅறிவிப்பை ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1008
தேர்வு: இளநிலை பொறியாளர் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு 2014
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Roads Construction Dept - 128
2. Water Resources Dept - 826
3. Drinking Water and Sanitation Dept - 36
4. Drinking Water and Sanitation Department - 18
Backlog vacancies : 102
1. Water Resources Dept - 55
2. Roads Construction Dept - 47
கல்வித்தகுதி: சிவில், மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு விளம்பரங்களை காணவும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட தேர்வு மற்றும் முதன்மை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. SC/ST பிரிவினருக்கு ரூ.125.
விண்ணப்பிக்கும் முறை: www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.jssc.in/Prospectus%20for%20Junior%20Engineer%20Combined%20Competitive%20Examination%202014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அகமதாபாத் ரயில்வே மண்டலத்தில் ஸ்டெனோகிராபர் பணி

குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில்வே மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் மற்றும் ஜூனியர் ஸ்டெனோகிராபர் (இந்தி) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 26
பணி:
1 ஸ்டெனோகிராபர்
2 ஜூனியர் ஸ்டெனோகிராபர் (இந்தி)
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சி, டிப்ளமோ அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு தேர்வு / செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப படிவம் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆர்ஆர்பி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Railway Recruitment Board, Ahmedabad 1st Floor, Meter Guage Building, Railway Station, Kalupur, Ahmedabad, Gujarat – 380 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbald.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 1 November 2014

அமலாக்கத் துறையில் துணை இயக்குநர் பணி

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வருவாய்த்துறையின் அமலாக்கப்பிரிவில் காலியாக உள்ள 95 துணை இயக்குநர் பணியிடங்களை டெபுடேஷன் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை இயக்குநர்
தகுதி: மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது நிகர் நிலை அமைப்புகளில் துணை இயக்குநர் பணிக்கு நிகரான பதவிகளில் தற்போது நிரந்தர அடிப்படையில் பணிபுரிபவர்கள், 5 வருட பணி அனுபவத்துடன் தற்போது இதே ஊதிய விகிதங்களில் பணியாற்றுபவர்கள், இத்துறையில் போதுமான அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்ச்சி முறை: இந்த பணிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை தெளிவாக நிரப்பி, உரிய சான்றிதழ்களி்ன் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Under Secretary (ED),
Ministry of Finance,
Dept. of Revenue,
Room No. 55, North Block, New Delhi
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி் தேதி: 12.11.2014
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு http://www.enforcementdirectorate.gov.in/vacancy_circular_ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்ஸில் 1536 உதவியாளர் பணி

காப்பீட்டு துறையின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1536   Assistants பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: The New India Assurance Co.Ltd. (NIACL)
காலியிடங்கள்: 1536
பணி: உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.7640. 21.050
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 முடித்திருக்க வேண்டும். பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.newindia.co.in/recruitment-notice2.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.