Monday, 11 May 2015

என்எல்சி நிறுவனத்தில் தட்ச்சர் & கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 23 தட்டச்சர் & கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர பெண்: 01/2015
பணி: Pharmacists Grade-B/Trainee (Grade:w-4)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.10,600 - 29,240
வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: D.Pharm படிப்பை முடித்து மத்திய/மாநில பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் கணக்காளர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Technician/Trainee (w-4)
காலியிடங்கள்: 02 (கால் ஊனமுற்றோர், காது கேளாதவர்கள்)
சம்பளம்: மாதம் ரூ.10,600 - 29,240
வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer/Trainee (Grade:w-3)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.10,300 - 28,390
வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் முதுநிலை கிரேடு மற்றும் ஆங்கில சுருக்கெழுத்திலி இளநிலை கிரேடு முடித்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Data Entry Operator/Trainee (Grade: w-4)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.10,600 - 29,240
வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணினியில் பி.எஸ்சி பட்டம் அல்லது பி.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட Data Entry Operator பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant/Typing (Grade: W-3)
காலியிடங்கள்: 05
சம்பளம்: 10,300 - 28,390
வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் முதிநிலை கிரேடு பயிற்சியை முடித்திருக்க வேண்டும். கணினியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Receptionist (Grade: w-3)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.10,300 - 28,390
வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிரபல நிறுவனங்களில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் பதிவு எண்ணுடன் கிடைக்கும் விண்ணப்பத்தை 2 நகல் பதிவிறக்கம் செய்து அதில் ஒன்றை தங்கள் கைவசம் வைத்துக்கொள்ளவும். மற்றொன்றை தேவையான சான்றிதழ் நகல்களில் சான்று பெற்று கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Deputy General Manager (HR),
Recruitment Cell, Human Resourse Department, Corporate Office, Neyveli Lignite Corporation Limited, Block -01, Neyveli - 607801, Tamilnadu.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.05.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment